மாணவர்களுக்கு 60 GB டேட்டா..வீட்டில் ஒருவருக்கு வேலை.. புதுச்சேரி காங். தேர்தல் அறிக்கை
புதுவை: காங்கிரஸ் கட்சி புதுவையில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 GB டேட்டா வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுவையில் தேர்தல்
புதுவையில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஒருபுறமும், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றோரு புறமும் களத்தில் மோதுகின்றன. புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அந்த ஆட்சி கவிழ்ந்ததால் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.

மோடி, ராகுல் பிரசாரம்
இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிடாதது காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. புதுவைக்கு பிரசாரத்திற்காக பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி ஆகியோர் வந்து சென்று விட்டனர்.

அச்ததும் தேர்தல் அறிக்கை
இரு கூட்டணி கட்சியினரும் மக்களிடம் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி புதுவையில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ், வீரப்ப மொய்லி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். நீட் தேர்வு ரத்து, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-
* குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
* புதுவைக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெறப்படும்
* மேல்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 GB டேட்டா வழங்கப்படும்.
* நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
*புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம்.
*அனைவருக்கும் மருத்துவ காப்பீடு.
*மீனவர்களின் ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
* குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும்.
* 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்படும்
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம்












Click it and Unblock the Notifications