மீனான்னு நெனப்பு.. கொஞ்சம் குண்டா இருப்பாராம்.. அதுக்காக மனைவி இப்டி செய்யலாமா.. ட்விஸ்ட்டை பாருங்க
கர்ப்பிணி போல குடும்பத்தை நம்ப வைத்து ஏமாற்றி உள்ளார் ஒரு இளம்பெண்
புதுச்சேரி: மருத்துவமனையில் தன்னை பிரசவத்துக்கு அனுமதிக்கும்வரை, ஒரு பெண் கலர் கலராக ரீல் விட்டு, பொய் பொய்யாக சொல்லி குடும்பத்தை ஏமாற்றி உள்ளார்.. புதுச்சேரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது..!
புதுச்சேரி மாநிலத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. அவர் நிறைமாத கர்ப்பிணி ஆவார்.
2 நாட்களுக்கு முன்பு இங்கு அவரை குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளனர்.. வார்டும் ஒதுக்கி அதில் அவர் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

கர்ப்பிணி
ஆனால், நேற்று முன்தினம் காலை அந்த கர்ப்பிணியை காணவில்லை.. இதனால் பதற்றமடைந்த கணவன், மனைவியை எங்கெங்கோ தேடி பார்த்துவிட்டு, இறுதியில் கோரிமேடு போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும், அந்த கர்ப்பிணியின் செல்போன் நம்பரை வைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது செல்போன் சிக்னல் விழுப்புரத்தை காட்டியது.. இதனிடையே, போலீசாரும், கணவரும் தன்னை தீவிரமாக வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள் என்பதை கர்ப்பிணி கண்டுபிடித்துவிட்டார். உடனே கோயம்புத்தூருக்கு தப்பி வந்தார்..

செல்போன் சிக்னல்
அப்போது அங்கிருந்தபடியே, தன்னுடைய சொந்தக்கார பெண்ணுக்கு போன் செய்துள்ளார்.. அதில், தன்னை யாரோ கடத்தி கொண்டுபோய், ஆபரேஷன் செய்து, வயிற்றில் இருந்த குழந்தையையும் எடுத்து கொண்டு ஓடிவிட்டதாகவும், தன்னை ஒரு இடத்தில் தங்கவைத்து விட்டு அவர்கள் தப்பி சென்றதாகவும் கூறியுள்ளார்.. அதற்குள் போலீசார் கோவை சிக்னலை வைத்து, மகளிர் போலீசாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பெண்ணை சுற்றி வளைத்துவிட்டனர்.

கர்ப்பம்
பிறகு, கோவை மகளிர் ஸ்டேஷனுக்கும் அழைத்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான் மொத்த மேட்டரும் வெளிச்சத்துக்கு வந்தது.. இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த நபருடன் திருமணம் நடந்துள்ளது.. தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் குடும்பத்தாரிடம் சொல்லி உள்ளார்.. அவரே ஆஸ்பத்திரிக்கு சென்று செக்கப் செய்து கொண்டதாகவும், ஸ்கேன் எடுத்து பார்த்ததாகவும், கருவில் இரட்டை குழந்தைகள் உள்ளதாகவும் உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார்.. 7வது மாதமும் வந்தது..

எஸ்கேப்
கர்ப்பிணிக்கு வளைகாப்பும் நடத்தப்பட்டது. 9வது மாதம் வந்தது.. அதற்கான பிரத்யேக நிகழ்ச்சிகள் வீட்டில் கர்ப்பிணிக்கு நடத்தப்பட்டன.. கடந்த டிசம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் சொன்னதாக வீட்டில் கூறியுள்ளார்.. ஆனால், டிசம்பர் மாதம் முழுக்க அந்த பெண்ணுக்கு பிரசவ வலி வரவில்லை.. இதை பற்றி கேட்டதற்கு பிரசவம் தள்ளிப் போவதாக டாக்டர்கள் சொல்லி உள்ளார்கள் என்றாராம்..

10 மாதம்
ஆனால் 10வது மாதமே முடிந்துவிட்டது.. இப்போதுதான் சொந்தக்காரர்களுக்கு சந்தேகமே வந்துள்ளது.. அதனால் ஜிப்மருக்கு சென்று செக்கப் செய்து கொள்ளுமாறு அட்வைஸ் தந்துள்ளனர்.. அதன்படிதான் 2 நாளைக்கு முன்பு ஜிப்மரில் மனைவியை கொண்டு வந்து கணவன் அனுமதித்துள்ளார்.. இதனால் என்ன செய்வதென்று பதறிப்போன அந்த பெண், அப்போதுதான் அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளார்.. இதற்கு காரணம், அந்த பெண் நிஜமாகவே கர்ப்பம் தரிக்கவில்லையாம்.. கர்ப்பம் அடைந்ததாக குடும்பத்தையே பொய் சொல்லி நம்ப வைத்துள்ளார்..

அவமானம்
இந்த பெண்ணும் பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக இருக்கவும், அவர் கர்ப்பிணி என்றே குடும்பத்தினர் நம்பிவிட்டார்களாம்.. விஷயம் தெரிந்துவிட்டால் அவமானமாகிவிடும் என்பதால், யாரோ கடத்தி கொண்டுபோய், ஆபரேஷனும் செய்து குழந்தையையும் கடத்தி கொண்டு போய் விட்டதாக நாடகம் ஆடிஉள்ளது தெரியவந்தது.. எஜமான் படத்தில் மீனா நடித்து கர்ப்பிணியாக ஏமாற்றுவாரே, அதுபோலவே இந்த பெண்ணும் முயன்றுள்ளார்.. இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், இத்தனை பொய்களை சொல்லி, நம்ப வைத்து, கூடவே குடும்பம் நடத்தி கொண்டிருந்த இவரது கணவர் தமிழக ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸாம்..!











Click it and Unblock the Notifications