பாஜகவின் மிகப்பெரிய பிளஸ் என்ன தெரியுமா?.. இசையமைப்பாளர் கங்கை அமரன் சொல்வதை பாருங்க!
புதுச்சேரி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 92-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இதேபோல் புதுச்சேரி மாநில பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் எதிரில் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி தேசிய நல்லாட்சி தினம் கொண்டாடப்பட்டது.

கங்கை அமரன்
இந்த நிகழ்ச்சிக்கு புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். மேலும், இயக்குநரும், இசையமைபபாளரும், தமிழக பாஜக நிர்வாகியுமான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பெரிய பிளஸ் இதுதான்
அப்போது நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன் கூறியதாவது:- பாஜகவுக்கு பெரிய பிளஸ் என்வென்றால் கடவுள் உண்டு என்பதுதான். கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சுற்றுகின்ற, சாமி சிலைகளை அவமதிக்கின்ற ஆட்கள் பாஜகவில் கிடையாது. தெய்வத்தை நம்பி வாழ்ப வர்கள் நாம். தெய்வத்தை நம்பினோர் கைவிடப் படமாட்டார்கள்.

முதலில் கம்யூனிஸ்ட் கட்சி
முதலில் கம்யூனிஸ்ட் கட்சி பிரபலமாவதற்கு தஞ்சாவூர் பகுதியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், மதுரை பகுதியில் பாவலர் வரதராஜனும் தான் முக்கிய காரணமாகும். உழைக்கும் மக்களின் விஷயங்கள், பஞ்சங்கள், பசியை பற்றி பாடி பிரபலப்படுத்தியவர்கள் அவர்கள்தான். அதற்கு பிறகு தான் விவசாய சங்கங்கள் எல்லாம் உருவானது.

அண்ணனை காப்பாற்றவில்லை
அண்ணனை காப்பாற்ற வரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியை தவிர வேறு இல்லை என்று எண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில் எனது அண்ணன் மீது ஒரு பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்து அழைத்து சென்றனர். ஆனால் அவரை காப்பாற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு தெரியவில்லை. ஒருத்தர் கூட அண்ணனை காப்பாற்றவில்லை. அதன்பிறகு எங்கள் குடும்பத்தில் அரசியலில் யாரும் இல்லை. இப்போது கட்சியில் இருக்கும் ஒரு ஆள் நான்தான் என்று கங்கை அமரன் பேசினார்.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
விழுப்புரத்தில்.. ' நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்க'.. நம்பிக்கை ஊட்டிய அமைச்சர் வன்னி அரசு -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications