புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயப்பட கூடாது.. ஜாலியா இருக்கணும்.. 2 வார்டுகள்.. கலர் கலர் கார்டூன்கள்.. குட்டீஸ்களை கலகலப்பாக்க!

குழந்தைகளுக்கான வார்டில் வண்ண வண்ண பெயின்ட்டிங் வரையப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

புதுச்சேரி: குழந்தைகளின் பயத்தை போக்குவதற்காக, புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியின், கொரோனா வார்டுகளின் சுவர்களில் கார்ட்டூன் பொம்மைகள், விலங்குகள், விளையாட்டுக்கள் என கலர் கலராக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், குறிப்பிட்ட 2 வார்டுகளில் சுவரெல்லாம் கார்ட்டூன்கள் நிரம்பி வழிகின்றன..

கொரோனா வைரஸ் 2-வது அலை படுமோசமாக உள்ளது.. முதல் அலையை போல இல்லாமல், இந்த இரண்டாவது அலையானது வயது வித்தியாசம் பாராமல் தாக்கி கொண்டிருக்கிறது. இதற்கு பச்சிளம் குழந்தைகளும் விலக்கல்ல..

கொரோனா.. அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலத்தில் மாபெரும் சரிவு.. அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்! கொரோனா.. அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலத்தில் மாபெரும் சரிவு.. அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!

பாதிப்பு

பாதிப்பு

இந்நிலையில் புதுவையிலும் அதிக அளவு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.. புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது, முழுக்க முழுக்க கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது...

டாக்டர்கள்

டாக்டர்கள்

2வது அலை வந்ததில் இருந்தே டாக்டர்கள், நர்ஸ்கள் பணியாளர்கள் என எல்லாருமே முழு வீச்சுடன் பணியாற்றினர். ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தொடங்கி கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளும் இங்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு அதிகளவு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..

மருத்துவமனை

மருத்துவமனை

அதேசமயம் இந்த 2வது அலை குழந்தைகளையும் புதுச்சேரியில் பாதித்து வருகிறது.. எனவே, இவர்களுக்காகவே கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு ஒன்று தயாராகி உள்ளது. அதுமட்டுமல்ல, 3-வது அலை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் ஆபத்து உள்ளதாக கூறப்படுவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக இந்த வார்டு உருவாக்கப்பட்டு உள்ளது.

 பொம்மைகள்

பொம்மைகள்

இந்த வார்டில் உள்ள சுவர்களில் நிறைய கலர் கலராக கார்ட்டூன் பொம்மைகள் வரையப்பட்டுள்ளன.. மேலும் குழந்தைகள் விரும்பும் விலங்குகளும் அதில் ஓவியமாக வரைந்து உள்ளனர்... இவை எல்லாமே குழந்தைகள் பார்த்து பார்த்து ரசிக்கும் வகையில் உள்ளன.

ஆக்சிஜன்

ஆக்சிஜன்

இது எதற்காக என்றால், ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தேவைப்படும் குழந்தைகளுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்லும் குழாய்கள் வெளியே தெரியாத வண்ணம் இந்த ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. தனியார் அறக்கட்டளை மற்றும் ஓவியர்கள் அமைப்பு இணைந்து இந்த ஓவியங்களை வரைந்து உள்ளனர்..குழந்தைகள் வார்டுக்குள் நுழைந்தவுடனேயே சுவரெங்கும் கார்ட்டூன் கேரக்டர்கள் நிரம்பி வழிகின்றன.. விளையாட்டுகளும், பொம்மைகளும் வரிசையாக கலர் கலராக உள்ளன..

 கார்ட்டூன்கள்

கார்ட்டூன்கள்

குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் சூழலை உருவாக்கவே இப்படி கார்ட்டூன்கள் வரையப்பட்டுள்ளன.. செடிகள் பூத்து, இலைகள் வரையப்பட்டு ஆக்சிஜன் குழாய்களை பார்த்து அந்த குழந்தைகள் பயப்படாத வகையில் இவை உருவாகி உள்ளன. 2 வார்டுகள் மொத்தமாக நூறு படுக்கை வசதிகளுடன் தற்போது தயாராகி வருகிறது... இந்த பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகிவிடும் என்கிறார்கள்..!

English summary
Children covid care center prepare with Colored Paintings in Puducherry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X