கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசின் அறிவிப்பால் ஸ்டூடண்ட்ஸ் ஹாப்பி அண்ணாச்சி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், வகுப்புகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து அங்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வில்லை. நள்ளிரவு வரை மதுபான விற்பனையுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் தலையிட்டதையடுத்து மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது.
நாள்தோறும் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை முதல் அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கூறியுள்ளார் மேலும் வகுப்புகள் இணையவழி கற்றல் மூலமாக மாணவர்களுக்கு தொடர்ந்து பாடம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications