அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரியில் தீபாவளிக்கு ரூ.6908.. அட் - ஹாக் போனஸ் பாருங்க
புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு, ரூ.7,000 தீபாவளி போனஸ் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான உத்தரவை புதுச்சேரி அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இது அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
புதுச்சேரியை பொறுத்தவரை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் புதுச்சேரி அரசு இருந்து வருகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் சம்பள முறை பின்பற்றப்படுவதுடன் வருடந்தோறும் தீபாவளி போனசும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. எனவே பல தரப்பினரும், போனஸ் கேட்டு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்.
தீபாவளி போனஸ்
அந்தவகையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும், வெகுமதித் தொகையை ரூ.6000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி கட்டுமான தொழிலாளர்கள், பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி கட்டுமான நல வாரிய அலுவலகத்தை நேற்று முன்தினமும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன், கட்டுமான தொழிலாளர்க்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையை ரூ.6 லட்சம் என உயர்த்தி வழங்கிட வேண்டும், தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மீண்டும் கல்வி உதவித் தொகையாக ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும், நலவாரிய நிதியை முழுமையாக கட்டிட தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் புதுச்சேரி மாநில குழு சார்பில் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.
புதுச்சேரி அரசு ஊழியர்கள்
இந்நிலையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு, ரூ.7,000 தீபாவளி போனஸ் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் B மற்றும் C பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் அதாவது ரூ.6,908 தீபாவளி போனஸ் கிடைக்கும் என்றும் நிதி அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். "மத்திய அரசு குரூப் -C மற்றும் நான்-கெசட்டட் குரூப் -B ஊழியர்கள் 2024- 25ம் ஆண்டிற்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான "அட்-ஹாக் போனஸ்" பெறுவார்கள் இந்தத் தொகை ரூ.6,908 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"அட்-ஹாக் போனஸ்"
மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுவை யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும், இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, புதுவை அரசில் பணிபுரியும் குரூப் B மற்றும் C பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியில் பணியில் இருந்த மற்றும் 2024- 25 ஆண்டில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியான சேவை தந்த ஊழியர்கள் மட்டுமே இந்த உத்தரவுகளின் கீழ் போனஸ் பெறலாம்.
நிதித்துறை - பட்ஜெட்
குறிப்பாக 3 ஆண்டுகள் அதற்கு மேல் பணிபுரிந்தோர் போனஸ் பெற தகுதியுடையவர்கள். போனஸை அந்தந்த துறைகளின் அனுமதிக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து ஈடு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுவை அரசின் நிதித் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ள புதுச்சேரி அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார், இந்த உத்தரவு நகலை அனைத்துத் துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்.
கடந்த வருடமும் அரசிதழ் பதிவு இல்லாத 15 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.. இந்த தீபாவளி போனஸ் மூலம் அரசுக்கு ரூ.18 கோடி வரை செலவாகியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications