Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுச்சேரியில் விஷவாயு கசிந்தது எப்படி? உண்மையை கண்டறிவதில் சிக்கல்.. வருகிறது டெல்லி ஐஐடி குழு!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டு கழிவறைக்குள் விஷவாயு வந்தது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்ய ஐஐடி குழு புதுச்சேரி வர இருக்கிறது.

கடந்த ஜூன் 11 ஆம் தேதி புதுச்சேரியில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கழிவறையில் விஷ வாயு தாக்கியதில் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகள் காமாட்சி (55) அவரை தூக்க சென்ற போது அவரும் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த பேத்தி பாக்கியலட்சுமி கழிப்பறைக்குச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார்.

puducherry gas police health

இதேபோல் அருகில் இருந்த ஒரு தெருவிலும் 15 வயது சிறுமி ப்ருவர் வீட்டிற்குள் செல்ல முயன்ற போது விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தார். இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கழிப்பறையில் இருந்து விஷவாயு வெளியேறிதால் 3 பேரும் பலியானது காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், மற்றும் சுகாராதத்துறையினர் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் விஷவாயு கசிகின்றதா என ஆய்வு நடத்தினர்.

கழிவுநீர் வடிகாலில் இருந்து கசிந்த விஷவாயு வீடுகளில் உள்ள கழிவறை மூலமாக வெளியேறி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

வீட்டின் கழிவறை வழியாக விஷ வாயு தாக்குவது என்பது இதுதான் இந்தியாவில் முதன் முறை. தற்போது அப்பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். ஹைட்ரஜன் சல்பேட் விஷ வாயு பரவியதால் இறப்பு நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள வீட்டில் விஷவாயு வந்தது எப்படி என கண்டறிவது சிரமமாக உள்ளதால் டெல்லி ஐஐடி குழுவினருக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஐஐடி குழுவினர் ஓரிரு நாளில் புதுச்சேரிக்கு வந்து ஆய்வு செய்ய உள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

அந்த குழுவினர் வந்து ஆய்வு செய்து, விஷ வாயு வந்தது எப்படி என்பதைக் கண்டறிந்து கூறிய பிறகு தான், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், அப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+