மலையாள வாசம்! சட்டென கேரளாவாக மாறிய புதுச்சேரி.. கலாச்சாரம் மாறாத சேட்டன்களின் திருவிழா
புதுச்சேரி: முத்தப்பன் திருவிழாவை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க புதுச்சேரி வாழ் கேரள மக்கள் பாரம்பரிய முறைப்படி சாமிக்கு கத்தி, கள்ளு கொடுத்து வழிபாடு நடத்தினர்.
கேரள மாநிலம் கண்ணூரில் அமைந்துள்ளது பரசின்னி கடவு முத்தப்பன் கோயில். கேரள மக்களின் பாரம்பரிய பெருமைமிக்கதாக கருதப்படும் இந்த கோயிலில் சிவபெருமானே இங்கு முத்தப்பனாக அவதாரம் எடுத்துள்ளதாக மலையாள மக்கள் கருதுகின்றனர்.

இந்த கோயிலில் சிவனும் சக்தியும் திருவப்பன், வெள்ளாட்டம் என்ற இரண்டு வேடங்களை அணிந்து, மாந்திரீக நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழ் மக்களின் குல தெய்வ வழிபாடு எப்படி நடைபெறுமோ அதே போல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழாவை பங்குனி மாதத்தில் நடத்துகின்றனர். இந்த கோயில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வழிபடுவது வழக்கம்.
ஆனால், வெளியூர்களில் தங்கி இருக்கும் கேரள மக்கள் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள இயலாத நிலை இருந்து வந்தது. இதனை போக்கும் வகையில், புதுச்சேரி வாழ் கேரள மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளூர் பாரம்பரிய முறைப்படி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். இறுதி நாளில் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் இரண்டு வேடங்களை அணிந்து சிவனும் சக்தியும் பள்ளி வேட்டை ஆடி குதித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி செண்டை மேளம் முழங்க நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற கேரள மக்கள் தங்களது தேவைகளை காதில் கூறி அருள்வாக்கு பெற்றனர். வேண்டுதல் நிறைவேற விழாவில் பங்கேற்ற பக்தர்கள் முத்தப்பனுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பச்சைப்பயறு, மீன், கருவாடு போன்றவற்றுடன் நீண்ட கத்தி மற்றும் தெண்ணங்கள் கொடுத்து வழிபட்டனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications