இடியாப்ப சிக்கலில் இருப்பது ரங்கசாமி தானாம். பாஜகவுக்கு 'நோ' சிக்கல்... புதுவை அரசியல்.. கதையே வேற!
புதுச்சேரி :50 நாட்களை கடந்த பின்னரும் புதுச்சேரியில் அமைச்சரவையை அமைக்க முடியாமல் முதல்வர் ரங்கசாமி திணறுவதற்கு சொந்த கட்சிக்காரர்களே காரணமாம். இவருக்கு பதவி கொடுத்தால், இவருக்கு சிக்கல், இவருக்கு பதவி கொடுத்தால் இன்னொருவர் எதிர்க்கிறார் என்பதால் என்ன செய்வது என்று திணறுகிறராம்
50 நாட்களாக அமைக்கப்படாத அமைச்சரவையை அடுத்த ஒரு வாரத்தில் அமைப்போம் என்று என்ஆர் காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவித்து 51 நாட்கள் ஆகிவிட்டது. சரியாக மே 2ம் தேதி முடிவுகள் வெளியாகின. என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ரங்கசாமி முதல்வராகி விட்டார்.. ஆனால், அவருடன் அமைச்சர்கள் யாரும் இதுவரை பதவி ஏற்கவில்லை.

தீர்க்க முடியவில்லை
முதல்வராக பதவியேற்ற ஒரு சில நாளிலேயே ரங்கசாமி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அமைச்சரவை அமைப்பது தள்ளிப்போனது. அவர் இரண்டு வாரங்கள் கழித்து உடல் நலம் தேறி பழைய நிலைக்கு வந்தார். ஆனால் அந்த இரண்டு வாரகாலத்தில் யார் யார் அமைச்சர் என்பதை இரு கட்சிகளால் பேசி தீர்க்க முடியவில்லை.

நிர்வாகம் இல்லை
என்ஆர் காங்கிரசுக்கும் - பாஜகவுக்கும் அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.. ஒருவரும் விட்டுக்கொடுக்கவில்லை.. அமைச்சரவையும் தயாராகவில்லை.. ஒரு பக்கம் கொரோனா மறுபக்கம் நிர்வாகம் இல்லாத நிலை என்று தொடர்ந்தது. பாஜக பதவிகளை கேட்டு ஒரு பக்கம் முரண்டு பிடித்தது. ஆனால் அதை தர முடியாது என்று ரங்கசாமியும் முரண்டுபிடிக்க அமைச்சரவை அமைவது தாமதம் ஆக காரணமானது. கடைசியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவே போனை போட்டு ரங்கசாமியிடம் பேசிய பின்னரே ரங்கசாமி, சபாநாயகர், 2 அமைச்சர்கள் தருவதற்கு சம்மதித்தாராம்.

அமித்ஷா
பாஜக பதவிகளை கேட்டு ஒரு பக்கம் முரண்டு பிடித்தது. ஆனால் அதை தர முடியாது என்று ரங்கசாமியும் முரண்டுபிடிக்க அமைச்சரவை அமைவது தாமதம் ஆக காரணமானது. கடைசியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவே போனை போட்டு ரங்கசாமியிடம் பேசிய பின்னரே ரங்கசாமி, சபாநாயகர், 2 அமைச்சர்கள் தருவதற்கு சம்மதித்தாராம்.

ஜான்குமார்
இந்த பட்டியலின் படி சபாநாயகராக பாஜகவின் செல்வம் ஆகிவிட்டார். பாஜக தரப்பில் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோர் அமைச்சர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனராம். இதேபோல் அமைச்சர் பாஜக பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜான்குமாரை நீக்கிவிட்டு, ஊசுடு தனித் தொகுதியைச் சேர்ந்த சாய்சரவணக்குமார் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதனால் ஜான்குமார் வருத்தத்தில் உள்ளாராம்.

என்ன சொல்கிறது
எனினும் 50 நாட்களாக அமைச்சரவை அமையாததற்கு நாங்கள் காரணமில்லை பாஜகவினர் தெளிவுபடுத்தியுள்ளனர். நமச்சிவாயம் இதுபற்றி ஆங்கில ஊடக்ததிற்கு அளித்த பேட்டியில், "பாஜக தரப்பில் அமைச்சர்கள் பட்டியலை முதல்வரிடம் வழங்கி ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டது. அமைச்சர்கள் பதவியேற்பு காலதாமதத்துக்கு பாஜக காரணம் இல்லை" என்றார்.

சிக்கலில் ரங்கசாமி
என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கொடுக்கும் அழுத்தமே பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள் புதுவை அரசியல் வட்டாரத்தில்.. "என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரும் அமைச்சர் பதவியைப் பெற கடும் முயற்சியில் உள்ளனர். தங்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என ரங்கசாமியை நெருக்கி வருகிறார்களாம். ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் மற்றவர்கள் அதிருப்தியடைகிறார்களாம். இதனால் தான் ரங்கசாமி தாமதம் செய்து வருகிறாராம்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications