தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை.. மாணவர்களுக்கு ‘ஸ்வீட்’ நியூஸ் கொடுத்த அமைச்சர்.. இங்கே நிலை என்ன?

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வரும் அக்டோபர் 2 (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முடிந்தபிறகு சொந்த ஊர்களில் இருந்து ஊர் திரும்ப வசதியாக தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு மறுநாள் (செவ்வாய் கிழமை) விடுமுறை அளிக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை இந்தாண்டு அக்டோபர் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட இருக்கும் நிலையில், புதுச்சேரியில் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். வெளியூர்களில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், இந்தாண்டு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்களின் கூட்டத்தால், முக்கிய நகரங்கள் நெரிசலில் நிரம்பி வழிகின்றன.

அன்று இரவே கிளம்ப வேண்டும்

அன்று இரவே கிளம்ப வேண்டும்

தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை வேலை நாளாக இருப்பதால், தீபாவளி அன்று இரவே பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, மாணவர்களும் அன்று இரவே திரும்ப வேண்டும். தீபாவளி விடுமுறையில் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டிய நிலை உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்ற நிலை இருக்கிறது.

போக்குவரத்து சிரமம்

போக்குவரத்து சிரமம்

இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசு சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன. பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், 25ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசு ஆலோசனை?

அரசு ஆலோசனை?

இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாள் 25-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கலாமா என்று தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடுமுறையை நவம்பர் 12-ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கலாம் எனவும் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை தமிழ்நாட்டில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அடுத்த நாள் விடுமுறை

அடுத்த நாள் விடுமுறை

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 25) அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+