திரை தீ பிடிக்கும்.. அட நிஜமாவே திரையில் தீ பிடிச்சிடுச்சி.. விக்ரம் தியேட்டரில் விக்கித்த ரசிகர்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் ஓடிக் கொண்டிருந்த போது திரை தீப்பிடித்து எரிந்ததால் ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
Recommended Video
கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, கார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நடிகர்களின் ரசிகர்கள் படத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்து வருகிறார்கள். டிக்கெட்டை பிளாக்கில் பெற்றாவது படத்தை பார்க்க குவிந்து வருகிறார்கள். படம் ஆக்ஷன் திரில்லர் கலந்து திரைப்படாமாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம், பெரிய காலாப்பட்டு பகுதியில் உள்ள தியேட்டரில் விக்ரம் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

கதை விறுவிறுப்பு
கதை விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்தது. அதில் சூர்யா நடிக்கும் காட்சிகளின் போது சூர்யா ரசிகர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது திடீரென திரை தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென பரவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரசிகர்கள்
பின்னர் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கிளைமாக்ஸ் சீனையும் பார்க்காமல் அலறி அடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியேறினர். திரையின் பெரும்பகுதி கொழுந்து விட்டு எரிந்தது. பின்னர் இதுகுறித்து காலாப்பட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீயில் எரிந்து நாசம்
இருப்பினும் தியேட்டர் திரையின் பெரும் பகுதி எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஹவுஸ் புல்
இதனால் அந்த தியேட்டரில் புக் செய்யப்பட்ட அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் அந்த தியேட்டரில் புக் செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மற்ற தியேட்டர்களிலும் படம் ஹவுஸ்புல் என்பதால் தமிழக எல்லைகளில் உள்ள தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications