தேம்பி தேம்பி அழுத ரங்கசாமி.. கர்சீப்பால் துடைத்துக் கொண்டே..மேடையில் வந்த சத்தம்.. அதிர்ந்த அரங்கம்
புதுச்சேரி: புதுச்சேரி ரங்கசாமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அந்த வீடியோவில் கண்ணீர் விட்டு அழுகிறார் ரங்கசாமி.. என்ன காரணம்?
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பொறுத்தவரை எதையும் பக்காவாக பிளான் செய்து கொண்டுதான் களத்தில் குதிப்பார்.. இப்படித்தான் அன்று, மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, புதுச்சேரியில், அதிமுகவுடன் கூட்டணி என, அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் எகிறியவர்தான் ரங்கசாமி..
ஜெயலலிதா: இதை அன்று ஜெயலலிதாவே பகிரங்கமாக விமர்சித்தார்.. ரங்கசாமி இப்படி செய்யலமா? நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

ரங்கசாமி, ஆரம்ப காலத்தில் இருந்தே நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர்.. இளம் வயதிலேயே காமராஜருக்கு மன்றமும் நிறுவியவர்.. இவர் முதல்வரான பிறகு, புதுச்சேரிக்கு செய்த பணிகள் ஏராளம்.. அதனால்தான், இவரது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், இவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் உற்சாகமாகிவிடுவார்கள். விதவிதமான பேனர்கள், கட் அவுட்கள், போஸ்டர்கள் அடித்து ஒட்டி ரங்கசாமியின் பிறந்தநாளை கொண்டாடுவது இவர்களின் வழக்கம்.
பொன்னியின் செல்வன்: அப்படித்தான் இந்த முறை பிறந்தநாளின்போது, "விக்ரம்" படத்தில் கமலுக்கு பதிலாகவும் ரங்கசாமி முகம் காணப்பட்டது.. "பொன்னியின் செல்வன்" படத்தில் குதிரையேறி வரும் கார்த்திக்கு பதிலாக ரங்கசாமி அந்த குதிரையில் உட்கார்ந்திருந்தார்.. அந்த அளவுக்கு புதுச்சேரி மக்களின் பொன்னியின் செல்வனாக மாறியவர். இந்நிலையில், ரங்கசாமியின் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது..
புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 2010 முதல் 2017 வரை படிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி இயக்குனர் உதயசங்கர் வரவேற்றார்.
இளங்கலை: இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ பட்டம் பெற்ற 626 பேருக்கு முதல்வர் ரங்கசாமி பட்டங்களை வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் கல்லூரி இயக்குனர் உதயசங்கர் பேசும்போது, முதல்வர் ரங்கசாமியால்தான் இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டது. அவரது கையால்தான் பட்டமளிப்பு விழா நடக்க வேண்டும் என இறைவனின் ஆசி இருந்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
இதற்கு அடுத்தபடியாக, முதுநிலை மருத்துவ மாணவி மணிமொழி பேசும்போது, 'நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவள்... அளவுக்கு அதிகமான வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள்.. எங்கள் குடும்பத்தில் உள்ள 4 பேரில் 3 பேரும் பெண்களே.. ஆனால், நாங்கள் 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி இருக்கிறோம் என்றால், இதற்கு காரணம் முதல்வர் ரங்கசாமி தான் என்றார்..
நெகிழ்ச்சி: மாணவி அப்படி சொன்னதுமே, ரங்கசாமியின் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டியது.. கர்சீப்பால் முகத்தை துடைத்து கொண்டே இருந்தார் ரங்கசாமி.. ஆனாலும், உணர்ச்சி வசப்பட்டு வழிந்த ஆனந்த கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.. இதைப்பார்த்து மேடையில் இருந்தவர்களும் நெகிழ்ச்சி அடைந்துவிட்டனர்.
இதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை.. புதுவையில் அன்றைய காலகட்டத்தில், மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளே நிறைய இருந்தன.. அப்போது, மாநில அரசுக்கெனவே, ஒரு பிரத்யேக கல்லூரியை உருவாக்க காங்கிரஸ் சார்பில் அன்று முதல்வராக இருந்த ரங்கசாமி மிக தீவிரமான முயற்சியை மேற்கொண்டார்..
கண்ணீர்: ஆனால், இதற்கு எத்தனையோ தடைகளும், முட்டுக்கட்டைகளும் ரங்கசாமிக்கு எழுந்தது.. நாலாபக்கமும், நெருக்கடிகள் ரங்கசாமிக்கு வந்துவிட்டது. ஒரு கட்டத்தில் மருத்துவ கல்லூரியை மாநில அரசு கைவிடும் நிலைக்கும் சென்றது. எனினும், புதுச்சேரிக்காகவே ஒரு கல்லூரி வந்தாக வேண்டும், ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று மனஉறுதியோடு நின்று, அந்த கல்லூரியை கட்டி முடித்தார் ரங்கசாமி..
சம்பந்தப்பட்ட ஏழை மாணவி, தான் மருத்துவம் பயின்றதை சொல்லவும், இந்த நினைவெல்லாம் ரங்கசாமிக்கு கண்முன்னே நிழலாடிவிட்டது போலும்.. அவரையும் மீறி கண்ணீர் வழிந்தபடியே இருந்தது - நீண்ட நேரத்திற்கு..!!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications