புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலாறு தெரியாம பேசுறாங்க.. சாவர்க்கர் யாரு தெரியுமா? தமிழிசை அழுத்தி சொன்ன வார்த்தை

Google Oneindia Tamil News

புதுச்சேரி: சாவர்க்கரும் ஒரு சுதந்திர போராட்ட வீரர்தான் என்றும், அவர் பற்றிய வரலாற்றை அறியாதவர்களே சாவர்க்கரின் நினைவு கல்லை பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்று ஆகஸ்டு 15 ஆம் தேதியுடன் 75 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. இதனை அடுத்து நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இப்போதே கலைகட்டி இருக்கின்றன.

புதுச்சேரி அரசு தனது பங்கிற்கு சுதந்திர போராட்ட வரலாறு பற்றியும், சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சாவர்க்கர் ஒன்றும் தியாகி அல்ல.. அவர் சுயசரிதையை ஆளுநர் தமிழிசை படிக்க வேண்டும்..நாராயணசாமி அதிரடி! சாவர்க்கர் ஒன்றும் தியாகி அல்ல.. அவர் சுயசரிதையை ஆளுநர் தமிழிசை படிக்க வேண்டும்..நாராயணசாமி அதிரடி!

சாவர்க்கர் பெயர்

சாவர்க்கர் பெயர்

அதில் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்து இருக்கும் காந்தி திடலில் வைக்கப்பட்டு உள்ள தியாக சுவற்றில் விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவரும், இந்து மகா சபா தலைவருமான சாவர்க்கரின் பெயர் பொறித்த கல்வெட்டும் பதிக்கப்பட்டு இருக்கிறது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு ஆங்கிலேயர்களிடம் பல முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கரின் பெயரை தியாகிகள் பட்டியலில் சேர்ப்பதாக கூறி பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், புதுச்சேரியில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழிசை சவுந்திரராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழிசை பேட்டி

தமிழிசை பேட்டி

அப்போது அவரிடம் சாவர்க்கர் கல்வெட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை, "வீர சாவர்க்கர் நாட்டுக்காக போராடி உள்ளார். படிக்க சென்ற இடத்தில் தேசிய கனலை ஊட்டியவர். சுதந்திர போராட்ட வரலாறு தெரியாதவர்கள் சாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை வைத்து பிரச்சனை செய்து வருகிறார்கள்.

அழுத்தமாக சொல்வேன்

அழுத்தமாக சொல்வேன்

வீர சாவர்க்கர் பெயர் பதித்த கல்லை வைத்ததில் எந்த தவறும் இல்லை. இதை அரசியலாக்க வேண்டாம். அரசியல் ஆக்கினாலும் எதிர்கொள்ள தயார். சுதந்திரத்துக்காக ஒரு சிறிய கல்லை எடுத்து போட்டாலும் அவர் சுதந்திர போராட்ட வீரர்தான். அவர்களையும் நாம் மதிக்க வேண்டும். யாரையும் கொச்சைப்படுத்தக் கூடாது. வீர சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதை எந்த சபையிலும் அழுத்தமாக என்னால் கூற முடியும்." என்றார்.

English summary
Puducherry Lt. Governor Tamilisai says Veer Savarkar is a freedom fighter: சாவர்க்கரும் ஒரு சுதந்திர போராட்ட வீரர்தான் என்றும், அவர் பற்றிய வரலாற்றை அறியாதவர்களே சாவர்க்கரின் நினைவு கல்லை பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X