புதுச்சேரி விஜிக்கு அவ்வளவு வெறி.. போதையில் முடிந்த ரவியின் கதை! ஜோசியருக்கு அங்கே என்ன வேலை? ஷாக்!
புதுச்சேரி: புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியில் ஆன்மீக சுற்றுலா ஏற்பாட்டாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெண் தோழி கழுத்தில் மிதித்து கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து அந்த பெண் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை போலீஸ் சந்து பகுதியை சேர்ந்த ரவிக்குமார் ஆன்மீக சுற்றுலா ஏற்பாட்டாளராக வேலை பார்த்து வந்தார். இந்தியா முழுவதும் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் வாங்கி சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது இவரது வேலை. திருமணமாகாத அவர் தனது வீட்டின் ஒரு பாகத்தை விற்று விட்டு மீதி இருக்கும் பகுதியில் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற போது புதுச்சேரி வெள்ளாளர் பகுதியைச் சேர்ந்த சமையல் வேலை பார்க்கும் விஜி என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. கணவனை இழந்த விஜிக்கும் ரவிக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் விஜி ரவிக்குமாரின் வீட்டுக்கு வந்து மது அருந்திவிட்டு தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி ரவிக்குமாரின் வீட்டுக்கு வெளியே வந்த விஜி அருகில் இருந்தோரை அழைத்து இரவு மது குடித்த ரவிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகம் ஆடி இருக்கிறார். இதையடுத்து ரவிக்குமாரின் அண்ணன் ராஜி மற்றும் அருகில் இருந்த ரவிக்குமாரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறி அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் முதலில் தற்கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். ரவிக்குமாரின் உடற்கூறு ஆய்வு முடிவடைந்த நிலையில் ரவிக்குமாரை யாரோ கழுத்தில் கடுமையாக தாக்கி கழுத்து எலும்பு முறிந்துள்ளதாகவும், கழுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கியதற்கான தடயங்கள் இருப்பதால் அவரை கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. இதை அடுத்து முதியார் பேட்டை போலீசார் கொலை வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை நடத்தினார்.
சம்பவம் நடந்த அன்று ரவிக்குமாருடன் தங்கி இருந்த விஜியை அழைத்து விசாரணை நடத்திய போது தனக்கு எதுவுமே தெரியாது என கூறி நடித்துள்ளார். விஜயின் அழுகையை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தனியே விசாரணை நடத்தியதில் அந்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது. கடந்த 22ஆம் தேதி சேலத்தைச் சேர்ந்த ஜோதிடர் ராஜா, விஜி மற்றும் ரவிக்குமாரின் உதவியாளர் சோதிலால் ஆகிய நான்கு பேரும் மது அருந்தி இருக்கிறார்கள்.
சோதிலால் வீட்டுக்குச் சென்று விட்ட நிலையில் ராஜா வீட்டின் ஒரு அறையில் தங்கி இருக்கிறார். அப்போது விஜியும் ரவிக்குமாரும் மது அருந்தி உள்ளனர். தனது வீட்டை மீண்டும் வாங்க பணம் தேவைப்படுவதாக கூறிய ரவிக்குமார் விஜயிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தருவதாக கூறிய விஜி வீட்டை தனது பேரில் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். ஆனால் ரவிக்குமார் மறுக்க இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த விஜி மது போதையில் இருந்த ரவிக்குமாரை கழுத்தில் மிதிக்க மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் கழுத்தில் கயிற்றை போட்டு தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி இருக்கிறார். தொடர்ந்து சோதிலாலை அழைத்து நடந்ததை கூறி உள்ளார். தொடர்ந்து மூவரும் இந்த கொலையை மறைத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து விஜி மற்றும் கொலையை மறைத்ததாக ஜோதிட ராஜா, சோதிலால் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications