ஆளுநருடன் எதிரும் புதிருமாக இருந்த நாராயணசாமி.. கிரண்பேடிக்கு இப்படி ஒரு ஆதரவா?.. நெகிழ்ச்சி சம்பவம்
புதுவை: கிரண்பேடி பிரிவை தாங்க முடியாததால் புதுவை கிழக்கு எஸ்பி ரட்சன சிங் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறை அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்ற கிரண்பேடி முதலில் அண்ணா ஹசாரேவின் அமைப்பில் இருந்தார். பின்னர் அங்கிருந்து பாஜகவில் இணைந்தார்.
பின்னர் அவர் 2016 ஆம் ஆண்டு புதுவையின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் அடங்கிய கோப்புகளில் கையெழுத்து இடுவதில்லை என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

நாராயணசாமி
அவ்வாறு நியமிக்கப்பட்ட நாள் முதல் கிரண்பேடிக்கும் நாராயணசாமிக்கும் இடையே அதிகார போட்டி இருந்து வந்தது. மேலும் புதுவையின் வளர்ச்சிக்கு கிரண்பேடி தடையாக இருப்பதாகவும் அரசு திட்டங்களை முடக்குவதாகவும் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்து வந்தனர்.

கையெழுத்து இயக்கம்
மேலும் அவரை திரும்பப் பெற கோரி தர்னா, உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம் என பல்வேறு போராட்டங்களில் காங்கிரஸ் ஈடுபட்டது. கவர்னரை கண்டித்து கடந்த மாதம் அடுத்தடுத்து போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து ஆளுநர் மாளிகையை சுற்றிலும் அரசு அலுவலகங்கள் முன்பும் போராட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

ஆளுநர் மாளிகை
கவர்னர் மாளிகையை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. துணை ராணுவமும் வரவழைக்கப்பட்டது. இதனால் கடற்கரை அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டார். புதிய ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரிவு தாங்க முடியலை
இந்த நிலையில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியின் பிரிவை தாங்க முடியாமல் புதுவை கிழக்கு எஸ்பி ரட்சனா சிங் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சக ஊழியர்களிடையே கண்ணீரை வர வழைத்தது. மேலும் இந்த சம்பவம் கிரண்பேடிக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.