புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு இமாலய வெற்றி.. காங். கட்சி ரொம்ப பாவம்.. தந்தி டிவி சர்வே

Google Oneindia Tamil News

புதுவை: புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியிலும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் மற்றும் என்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

திமுக, இடதுசாரிகள், விசிக கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல பாஜகவுடன் இணைந்து என்ஆர் காங்கிரஸ் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது.

கன்னியாகுமரியில் காங்கிரசுக்கு அதிக வாய்ப்பு... கிட்ட நெருங்கும் பொன்னர்... தந்தி டிவி சர்வேகன்னியாகுமரியில் காங்கிரசுக்கு அதிக வாய்ப்பு... கிட்ட நெருங்கும் பொன்னர்... தந்தி டிவி சர்வே

 தந்தி டிவி கருத்துக்கணிப்பு

தந்தி டிவி கருத்துக்கணிப்பு

இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தந்தி டிவி வெளியிட்டுள்ளது. அதில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக 47-53% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக 44-50%, நாம் தமிழர் 1-4 %, மநீம+1-4% வாக்குகளை பெறும். ஊசுடு தொகுதியில் பாஜக 45-51% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 44-50%, நாம் தமிழர் 1-4 %, மநீம+2-5% வாக்குகளை பெறும். அரியாங்குப்பம் தொகுதியில் காங்கிரஸ் 44-50%, வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து என்ஆர் காங்கிரஸ் 42-48%, நாம் தமிழர் 3-6 %, மநீம+3-6% வாக்குகளை பெறும்.

 காங்கிரஸ் vs என்ஆர் காங்கிரஸ்

காங்கிரஸ் vs என்ஆர் காங்கிரஸ்

முத்தியால்பேட்டை தொகுதியில் அதிமுக 39-45% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 30-36%, சுயேட்சை - 18-24%, நாம் தமிழர் 1-4 %, மநீம+1-4% வாக்குகளை பெறும் காலாப்பட்டு தொகுதியில் பாஜக 47-53% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக 42-48%, நாம் தமிழர் 1-4 %, மநீம+2-5% வாக்குகளை பெறும். காமராஜ் நகர் தொகுதியில் பாஜக 48-54% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 42-48%, நாம் தமிழர் 2-5 %, மநீம+2-5% வாக்குகளை பெறும். நெடுங்காடு தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 42-48% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 37-43%, சுயேட்சை - 7-13% நாம் தமிழர் 3-6 %, மநீம+2-5% வாக்குகளை பெறும். உழவர்கரை தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 46-52%, விசிக 37-43%, நாம் தமிழர் 4-7 %, மநீம+ 4-7% வாக்குகளை பெறும்.

 ரங்கசாமி தொகுதியில் என்ன நிலை

ரங்கசாமி தொகுதியில் என்ன நிலை

என்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி போட்டியிடும் ஏனாம் தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. இந்தத் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 50-56% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து சுயேட்சை 31-37%, மற்றவை 10-16% வாக்குகளை பெறும். மாஹே தொகுதியில் காங்கிரஸ் 48-54% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து என்ஆர் காங்கிரஸ் 29-35%, மற்றவை 14-20% வாக்குகளை பெறும். ஏம்பலம் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 45-51% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 44-50%, நாம் தமிழர் 2-5 %, மற்றவை 3-6% வாக்குகளை பெறும். மணவெளி தொகுதியில் பாஜக 45-51% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 41-47%, நாம் தமிழர் 2-5 %, மநீம+3-6% வாக்குகளை பெறும்.

 வாக்குகளை பிரிக்கும் சுயேட்சை வேட்பாளர்

வாக்குகளை பிரிக்கும் சுயேட்சை வேட்பாளர்

வில்லியனூர் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 44-50% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக 43-49%, நாம் தமிழர் 2-5 %, மநீம 2-5% வாக்குகளை பெறும். திருநள்ளார் தொகுதியில் பாஜக 31-37% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து சுயேட்சை 29-35%, காங்கிரஸ் 27-33%, நாம் தமிழர் 2-5 % வாக்குகளை பெறும். நிரவி திருபட்டினம் தொகுதியில் திமுக 44-50% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து பாஜக 42-48%, நாம் தமிழர் 4-7% வாக்குகளை பெறும். காரைக்கால் வடக்கு தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 46-52% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 38-44%, நாம் தமிழர் 3-6 %, மநீம 2-5% வாக்குகளை பெறும் பாகூர் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 46-52% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக 37-43%, மநீம+ 4-7% நாம் தமிழர் 3-6 % வாக்குகளை பெறும்.

 என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி

என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி

நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக 44-50% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக 36-42%, மநீம+ 6-9% நாம் தமிழர் 3-6 % வாக்குகளை பெறும். இந்திரா நகர் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 49-55% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 37-43%, மநீம+ 3-6% நாம் தமிழர் 2-5 % வாக்குகளை பெறும். நெட்டப்பாக்கம் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 45-51% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 42-48%, மநீம+ 1-4% நாம் தமிழர் 2-5 % வாக்குகளை பெறும். கதிர்காமம் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 47-53% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 39-45%, நாம் தமிழர் 3-6 % வாக்குகளை பெறும். லாஸ்பேட்டை தொகுதியில் பாஜக 42-48% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 39-45%, நாம் தமிழர் 3-6 %, மநீம+ 6-9% வாக்குகளை பெறும்.

 திமுக vs அதிமுக

திமுக vs அதிமுக

உருளையன்பேட்டை தொகுதியில் திமுக 31-37%, வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து அதிமுக 29-35%, சுயேட்சை - 25-31%, நாம் தமிழர் 2-5 %, மநீம+2-5% வாக்குகளை பெறும். முதலியார்பேட்டை தொகுதியில் அதிமுக 46-52% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக 42-48%, நாம் தமிழர் 2-5 %, மநீம+2-5% வாக்குகளை பெறும். காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக 44-50% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து அதிமுக 41-47%, நாம் தமிழர் 4-7 % வாக்குகளை பெறும். உப்பளம் தொகுதியில் திமுக 45-51% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து அதிமுக 42-48%, நாம் தமிழர் 2-5 %, மநீம+ 3-6% வாக்குகளை பெறும்.

 என்ஆர் காங்கிரஸ் ஆதிக்கம்

என்ஆர் காங்கிரஸ் ஆதிக்கம்

திருபுவனை தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 48-54% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக 35-41%, நாம் தமிழர் 3-6 %, மநீம+ 3-6% வாக்குகளை பெறும். தட்டாஞ்சாவடி தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 52-58% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து இ. கம்யூ 36-42%, நாம் தமிழர் 2-5 %, மநீம+ 2-5% வாக்குகளை பெறும். ராஜ்பவன் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 43-49% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக 39-45%, நாம் தமிழர் 2-5 %, மநீம+ 4-10% வாக்குகளை பெறும். மங்கலம் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் 50-56% வாக்குகளை பெற்று வெல்லும். அதைத்தொடர்ந்து திமுக 37-43%, நாம் தமிழர் 3-6 %, மநீம+ 2-5% வாக்குகளை பெறும்.

 என்ஆர் காங்கிரசுக்கு மாபெரும் வெற்றி

என்ஆர் காங்கிரசுக்கு மாபெரும் வெற்றி

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 21இல் என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி தெரிவித்துள்ளது. 3 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி தெரிவித்துள்ளது. 6 தொகுதிகளில் இரு கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக தந்தி டிவி தனது கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது.

English summary
Thanthi tv opinion polls on puducherry election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X