Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay.. தமிழக வெற்றிக்கழக அறிக்கையில் மிஸ்ஸான நான்காவது பாயிண்ட்... கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் மக்கள் சந்திப்பு நிகழ்வு நடக்கும் இடத்தில் அமைதி காக்க வேண்டும். பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தாமல், கழிவுகளைக் கண்ட இடங்களில் போடாமல், சுத்தத்தைப் பேண வேண்டும் என்பது உள்ளிட்ட 9 வழிகாட்டு நெறிமுகுளை தவெக வெளியிட்டுள்ளது. இதில் நான்காவது பாயிண்ட் இல்லை.. டைப் செய்து அனுப்பும் சிறு தவறு நடந்திருக்கிறது. அதனை பெரிதாக்கி சில நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையல், "நாளை (09.12.2025, செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதி அளித்த வழிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

Vijay tvk Puducherry meeting Teasing netizens over The fourth point missed in the Tamilaga Vettri Kazhagam

புதுச்சேரி யூனியன் தமிழாகிய ஊடாடும் உடன் உள்ளதால், தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நம் வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள், தன்னை நேசிக்கும் மக்களின் பாசப் பிடியில் உள்ளளவும் சௌசவ செய்கொள்ளுவார்கள். எனவே நம் வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் இந்தப் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கின்றோம்.

1 கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியவர், பள்ளிச் சிறுவர், சிறுமிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சியைக் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

2 நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களாலோ அல்லது வேறு வாகனங்களாலோ பின் தொடர்வதைத் தவிர்க்கவும். போக்குவரத்துச் சீர்மையாகச் செயல்படுவதற்குப் போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டுமென அறிவுறுத்தல்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

3. காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்துக்கு எந்த விதமான விபத்துகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தக் கூடாது. அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத் தோழர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

5. வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள இடத்தை மட்டுமே பார்க்கிங்கிற்குப் பயன்படுத்த வேண்டும். பழைய தலைநகர் மற்றும் இந்திரா காந்தி சிலையடி வீதிகள், வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறாகவோ வாகனங்களை நிறுத்தக் கூடாது.

6. மக்கள் சந்திப்பு நிகழ்வு நடக்கும் இடத்தில் அமைதி காக்க வேண்டும். பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தாமல், கழிவுகளைக் கண்ட இடங்களில் போடாமல், சுத்தத்தைப் பேண வேண்டும். நம் கழகத்தின் மீது நற்பெயரைக் காக்க, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றிச் செயல்பட வேண்டும். அநாவசியமாக வதந்திகள் பரப்பக்கூடாது. நம் தலைவர் மீது பாசமுள்ள தோழர்கள் அனைவரும், சகோதரர்களாக ஒருவருக்கொருவர் இணக்கமாகப் பழக வேண்டும். நம் வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் உணவைப் பாழாக்கும் வகையிலோ அல்லது கொடுப்பதில் பாகுபாடு காட்டும் வகையிலோ நடந்துகொள்ள மாட்டார். எனவே, கொடுக்கப்படும் உணவை யாருக்கும் கொடுக்காமல், பிற மாண்டவர்களுக்குப் பாகுபாடு காட்டும் வகையிலோ பேசக்கூடாது.

7. எளிதில் அடையக்கூடிய மற்றும் காணக்கூடிய இடங்களில் (சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில்) பேனர், தட்டிகள், சுவரொட்டிகள், கொடிகள் போன்ற விளம்பரப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. அநாவசியமாகத் தலைமைக் கழகத்தின் நிதியில் இருந்து செலவு செய்யத் தேவையில்லை.

8. மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் விளம்பரப் பலகைகளோ, சுவரொட்டிகளோ வைக்கவோ, கொடி கட்டவோ நிரந்தரமாக அனுமதி கிடையாது. மீறுபவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்.

9. மக்கள் சந்திப்பு நிகழ்வு நடக்கும் பகுதிகள் மற்றும் அதன் அருகில் உள்ள தனிப்பட்ட கட்டிடங்கள், கால்நடை சாவடிகள், மரங்கள், வாகனங்கள் (இரு சக்கர வாகனம், ஆட்டோ, லாரி, கார்கள்), கொடிக்கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறுவது கூடாது. மின்சாரக் கம்பங்கள், மின்சாரத் துறை சார்ந்த மின்மாற்றிகள் (EB Transformers) ஆகியவற்றின் அருகில் செயல்படக்கூடாது. அவற்றின் அருகில் ஏதேனும் பாதுகாப்பு வேலிகள் அல்லது தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால், அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது..

Vijay tvk Puducherry meeting Teasing netizens over The fourth point missed in the Tamilaga Vettri Kazhagam

இதில் 4வது பாயிண்ட் குறிப்பிடப்படவில்லை. 6வது பாயிண்ட்டாக அந்த விஷயம் சேர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த சிறிய டைப்பிங் தவறை கிண்டல் செய்து சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக திமுக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு தவெகவினர் கடுமையான பதிலடியும் கொடுத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+