உனக்கு 19, எனக்கு 40.. 21 வயது மூத்தவரை காதலித்த கோமதி.. சினிமாபோல் விரட்டிய உறவினர்கள் சேசிங்! பரபர

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: 40 வயது காதலனுடன் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்த 19 வயது பெண் பெற்றோருடன் செல்ல மறுத்ததால் அவரை காதலனுடனே கீரமங்கலம் போலீசார் அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டம் கீரமங்கலம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார்(40). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசிப் பாளையம் பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அவினாசிப் பாளையம் பகுதியைச் சேர்ந்த கோமதி (19) என்ற இளம் பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டு உள்ளது.

இருவரும் காதலித்து வருவது கோமதியின் பெற்றோருக்கு தெரியவரவே அவரது குடும்பத்தினர், இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். இதனால் வேறு வழியின்றி இருவருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

காதலனுடன் சென்ற காதலி

காதலனுடன் சென்ற காதலி


இதனை அடுத்து தனது வீட்டை விட்டு வெளியேறிய கோமதி, சசிக்குமாருடன் சென்றார். சசிகுமார் கோமதியை திருப்பூர் அவினாசிப் பாளையத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். உடனே கோமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோமதியைத் தேடி கீரமங்கலம் வந்தனர்.

கோயிலில் திருமணம்

கோயிலில் திருமணம்

இந்த தகவல் சசிகுமாருக்கும் கோமதிக்கும் தெரியவந்து உள்ளது. கோமதியின் உறவினர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சம் அடைந்த காதல் தம்பதி கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டது. இதனை அடுத்து பாதுகாப்பு கோரி திருமணக் கோலத்தில் கீரமங்கலம் காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சம் அடைந்தனர்.

காவல் நிலையம் வந்த பெற்றோர்

காவல் நிலையம் வந்த பெற்றோர்

அவர்களிடம் விசாரித்த போலீசார், கோமதியின் பெற்றோரை காவல் நிலையம் அழைத்தனர். உடனே அங்கு வந்த பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போதும் கோமதியின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், கோமதி சசிகுமாருடன் செல்லவே விருப்பம் தெரிவித்தார்.

காதலனுடன் அனுப்பி வைப்பு

காதலனுடன் அனுப்பி வைப்பு

கோமதியின் விருப்பத்தை அறிந்த காவல்துறையினர், சசிக்குமாருடன் அவரை அனுப்பி வைத்தனர். 40 வயது நபரை 19 வயது இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டு பெற்றோருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் புதுக்கோட்டை கீரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+