“ஆளுநரின் ஆளுமையே”.. திமுகவுக்கு எதிராக பாஜக ஒட்டிய போஸ்டர்.. தீவிரமடையும் போஸ்டர் யுத்தம்!
புதுக்கோட்டை : தமிழ்நாடு ஆளுநர் vs ஆளும்கட்சியான திமுக இடையே மோதல் போக்கு வெளிப்படையாகவே வெடித்துள்ள நிலையில், ஆளுநர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்நிலையில், ஆளுநர் ரவிக்கு ஆதரவாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக - பாஜக இடையேயான இந்த போஸ்டர் யுத்தம் அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, சில பகுதிகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையின் தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ரவிக்கு எதிராக டுவிட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. ஆளுநருக்கு எதிராக போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இந்நிலையில், பாஜகவினர் ஆளுநருக்கு ஆதரவாக போஸ்டர்களை தயாரித்து ஒட்டியுள்ளனர்.

ஆளுநர் உரை சர்ச்சை
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா, சமூகநீ்தி, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்காததும், தான் சில வரிகளைச் சேர்த்து வாசித்ததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

கடும் கண்டனம்
இதனையடுத்து ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்த வாக்கியங்கள் மட்டும் சட்டசபை அவைக் குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும், ஆளுநர் ஆற்றிய உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ரவி கூட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார். இதனையடுத்து தேசிய கீதத்தை ஆளுநர் மதிக்கவில்லை என புகார் எழுந்தது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

கெட் அவுட் ரவி போஸ்டர்
சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர், தமிழ்நாட்டில் இருந்தும் வெளியேற வேண்டும் என்று, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ட்விட்டரில் ஆளுநருக்கு எதிராக #GetOutRavi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் திமுக சார்பில் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ட்விட்டரில் ட்ரெண்டிங்கான #GetOutRavi என பதிவிட்ட அனைவருக்கும் நன்றி என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு ஆதரவாக போஸ்டர்
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஆதரவாக 'ஆளுநரின் ஆளுமையே' என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். பாஜக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் சீனிவாசன், ஆளுநருக்கு ஆதரவாக புதுக்கோட்டை முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். ஆளுநர் vs ஆளும் கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் திமுக - பாஜக இடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருவது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

போஸ்டர் யுத்தம்
முன்னதாக, கடந்த மாதம் ஆளுநர் நிலுவையில் வைத்திருக்கும் தீர்மானங்கள் தொடர்பாக திமுக ராஜ்யசபா எம்.பி எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டையில் பேனர் வைத்த நிலையில், பாஜக நிர்வாகி சீனிவாசன், அப்துல்லா மேலவை உறுப்பினர் என்பதை விமர்சிக்கும் வகையில் "ஆளுநர் புதுக்கோட்டை வருவதாக எனக்கு தெரியவில்லை. இந்த டிஜிட்டல் பேனரை சென்னையில் வைத்தால் மிக்க நன்றி. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா எம்பி அவர்களுக்கு நன்றி!" என பேனர் வைத்திருந்தார். அதற்கு அப்துல்லா எம்.பி, "மேலவை எம்பி என்றால் ஏதோ தேர்தல் இல்லாத "கவர்னர்" போன்ற நியமன பதவி என்று நண்பர் சீனிவாசன் நினைத்து விட்டார் போல" என விமர்சித்திருந்தார்.
-
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications