புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யார் இந்த இந்திராணி.. பிச்சைக்காரர்களை கூட விடலை.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி!

பிச்சைக்காரர்களிடம் ஒரு பெண் லஞ்சம் பெற்றுள்ளார்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: 2 நாட்களாக ஒரு செய்தி அதிர்ச்சியை தந்து வருகிறது.. பிச்சைக்காரர்களையும் விட்டு வைக்காமல், அவர்களிடம் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது.. இது முதல் ஷாக்.. இப்படி ஒரு லஞ்சம் வாங்கியது ஒரு பெண் என்பது 2 வது ஷாக்..!

புதுக்கோட்டை கீழராஜா வீதி அருகே உள்ள சாந்தநாதர் சுவாமி கோவில் உள்ளது.. இது ரொம்ப ஃபேமஸ் ஆன கோயில்.. இதனால் கோவிலின் வெளியே யாசகம் கேட்பவர்கள் சிலர் உட்கார்ந்திருப்பார்கள்...

கோயிலுக்கு வருபவர்கள் இவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள்.. குறிப்பாக, தை அமாவாசை தினத்தன்று இங்கு ஏகப்பட்ட பக்தர்கள் திரண்டு வருவதால், அன்றைய தினம் தான் இவர்களுக்கு ஓரளவு சொற்ப பணம் கூடுதலாக கிடைக்கும்... அவ்வளவுதான்..!

கோயில்

கோயில்

அப்படித்தான் இந்த அமாவாசைக்கும் பக்தர்கள் திரண்டு வந்தனர்.. கோயில் வாசலில் பிச்சை எடுக்க வந்தவர்களிடம் பொதுமக்கள் யாசகம் தந்து கொண்டிருந்தனர்.. அந்த நேரத்தில் இந்திராணி அங்கே வந்தார்.. இவர் அதிகாரி இல்லை.. அதே கோயில் ஊழியர் ஆவார்.. அதுவும் தற்காலிக ஊழியர்.. அந்த கோயிலை சுத்தம் செய்பவராம். அங்கிருந்த பிச்சைக்காரர்களிடம் இந்திராணி தலா 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.. மேலும், அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் தொழில் செய்யும் புரோகிதர்களிடமும் தலா 1,600 ரூபாய் இந்திராணி வாங்கியிருக்கிறார்.

 ஏமாற்றம்

ஏமாற்றம்

இதனால், அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்த பிச்சைக்காரர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தகவல் சொல்ல.. அந்த அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்... ஆனால், போலீசாரோ, இந்திராணியை கைது செய்யவில்லை போல தெரிகிறது..

 மன்னிப்பு

மன்னிப்பு

"இனிமேல் இப்படியெல்லாம் பணம் வசூலிக்கக்கூடாது" என்று வார்ன் செய்து மட்டும் இந்திராணியிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி கொண்டு, அவரை திருப்பி அனுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.. இது பிச்சைக்காரர்களுக்கு மேலும் அதிருப்தியை தந்துள்ளது. ஆனால், லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி விட்டது.. இவங்களையும் விட்டுவைக்கலையா? என்று கேட்டு பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர்..

உத்தரவு

உத்தரவு

இந்த வீடியோ நிறைய ஷேர் ஆக ஆரம்பித்தது... இதன்விளைவு, புதுக்கோட்டை நகர காவல்நிலைய போலீசாருக்கு மாவட்ட எஸ்பி, தீவிரமான நடவடிக்கையை உடனே எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.. அந்த வீடியோவில் 10 ரூபாய் நோட்டை அவ்வளவு அலட்சியமாக எண்ணுகிறார் அந்த பெண்.. ஒரு வயசான தாத்தாவை பிச்சை எடுக்க விடாமல், கோயில் வாசலில் இருந்து விரட்டுகிறார்..

 தாத்தா

தாத்தா

"இங்கே வந்து பிச்சை எடுக்க வேண்டுமானால் மாச மாசம் 1000 ரூபாய் தர வேண்டும்" என்கிறார்.. அதுமட்டுமல்ல, ஒரு வயதான தம்பதி இங்கு வாசலில் பிச்சை எடுத்து வருகிறார்கள்.. "இந்த பெண்ணுக்கு 1000, 1000ரூபாய் என 2 ஆயிரம் தந்துவிட்டுதான் கோயில் வாசலில் தாங்கள் உட்கார்ந்திருக்கிறோம்" என்று கண்ணீர் மல்க சொல்கிறாராம்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

பிச்சை எடுத்த சில்லறை காசுகள், 10 ரூபாய் நோட்டுக்களை எல்லாம் அங்கிருக்கும் கடைகளில் கொடுத்து, 500 ரூபாயாக மாற்றி கொண்டு கிளம்பி செல்வாராம் இந்த பெண்..! அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடிவரும் நிலையில், பிச்சைக்காரர்களிடமும் லஞ்சம் வாங்கியிருப்பது இந்த தமிழ்நாட்டுக்கே ஒரு அவமானமாக விளங்கி வருகிறது..!

English summary
Bribe from beggars shocking incident in Pudukkottai, Viral Video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X