புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுமை தாங்காமல் பிரிந்து போன லதா.. தேடி சென்று கொன்று தீர்த்த வெறி பிடித்த வேலுச்சாமி

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: பிரிந்து சென்ற மனைவியை தேடி சென்று, கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்த தம்பதி வேலுசாமி-லதா. இவர்களுக்கு 2 குழந்தைகள்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

ஒரு கட்டத்தில் வேலுச்சாமியின் கொடுமையை பொறுக்க முடியாத லதா, குழந்தைகளை அழைத்துகொண்டு அம்மா வீட்டுக்கே வந்துவிட்டார்.

2 குழந்தைகள்

2 குழந்தைகள்

அவர்களை காப்பாற்ற ஒரு விராலிமலை பஸ் ஸ்டேண்டில் இருக்கும் ஃபேன்சி ஸ்டோரில் வேலைக்கும் செல்கிறார். காலையில் பிள்ளைகளை காலையிலும், மாலையிலும் ஸ்கூலில் கொண்டு போய் விட்டு சாயங்காலம் கூப்பிட்டு வருவதுதான் லதாவின் வழக்கம்.

தகராறு செய்த வேலுசாமி

தகராறு செய்த வேலுசாமி

இன்று காலையும் வழக்கம்போல் 2 பிள்ளைகளையும் ரெடி பண்ணி ஸ்கூலில் விட்டுவிட்டு கடைக்கு வந்தார் லதா. அப்போது கடையில் வேலுசாமி சண்டைக்கு தயாராக நின்று கொண்டிருந்தார். கடையிலேயே சண்டை ஆரம்பமானது.

ஸ்டேஷனில் சரண்

ஸ்டேஷனில் சரண்

பிறகு ஆத்திரம் அடைந்த வேலுசாமி, மறைத்து வைத்திருந்த கத்தியால் லதாவின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினார். இதில் நிலைகுலைந்து விழுந்த லதா ரத்த வெள்ளத்திலேயே அங்கேயே பிணமாக சரிந்தார். பிறகு வேலுசாமி கத்தியுடன் விராலிமலை போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்துவிட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கட்டிப்பிடித்து அழுதனர்

கட்டிப்பிடித்து அழுதனர்

லதா இறந்த சம்பவம் பள்ளியில் இருந்த குழந்தைகளுக்கு தெரிவிக்கப்பட்டது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சாப்பாடு ஊட்டிவிட்டு, ஸ்கூலில் கொண்டு வந்து விட்ட தாய், ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு குழந்தைகள் கதறி துடித்தனர். லதாவின் உடலை கட்டிப்பிடித்துகொண்டு பிள்ளைகள் அழுதது அங்கிருந்த அனைவரையும் உலுக்கி போட்டுவிட்டது.

English summary
Husband Killed wife due to family issue in Viralimalai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X