யாரு பாஸ்? ஷாயாஜி ஷிண்டேவா.. அண்ணாமலை பேச்சுக்கு திமுக எம்பி அப்துல்லா பரபரப்பு பதிலடி!
புதுக்கோட்டை: திமுகவில் இருந்து ஒரு ஷிண்டே வெளி வருவார் என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் நடக்கும் போது, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டால், இங்கேயும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என்று தெரிவித்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, அண்ணாமலையின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஆறு இடங்களில் தலா ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா திறந்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் ரூ.2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டது. அதனை முழுவதுமாக புதுக்கோட்டை நகரின் பல்வேறு நிகழ்ச்சி திட்ட பணிகளுக்கு வழங்கிவிட்டேன் அடுத்த 2 ஆண்டுகளில் கொரோனா காரணமாக நிதி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.5 கோடி நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செய்யப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், குஜராத் வன்முறை உள்ளிட்ட வழக்குகளில் இருந்து மோடி மற்றும் அமித்ஷா விடுவிக்கப்பட்ட நிலையில் ராதாரவி இருவரையும் குற்றவாளி என்று கூறியுள்ளதற்கு அவர்கள் தான் பதில் கூற வேண்டும் என்றார்.
தொடர்ந்து அண்ணாமலை கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, சாயா ஸ்ரீ ஷிண்டே என்று ஒரு நடிகர் உள்ளார். அவரும் திமுகவில் இல்லை. எனவே எந்த ஷிண்டேயும் திமுகவிலிருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறினார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?












Click it and Unblock the Notifications