புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருடனுங்க.. திருடனுங்க.. கோயிலுக்கு வந்த அப்பாவி குடும்பத்தினர் மீது தாக்குதல் -சிறுமி கவலைக்கிடம்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள ஒரு கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்ற குடும்பத்தினரை, 'திருடர்கள்' என நினைத்த இளைஞர்கள் சிலர் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயங்கர சம்பவத்தில் படுகாயமடைந்த 10 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புதிதாக வருபவர்களை யார், என்னெவென்று எதுவும் தெரியாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. அசாம், ஒடிசா, கேரளா, தமிழகம், கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

புதுக்கோட்டை: எடப்பாடி பழனிசாமி-க்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் ஐடி ரெய்டு! புதுக்கோட்டை: எடப்பாடி பழனிசாமி-க்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் ஐடி ரெய்டு!

 திருவண்ணாமலை பயங்கரம்..

திருவண்ணாமலை பயங்கரம்..

உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொடூர சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. திருவண்ணாமலையில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் 2018-ம் ஆண்டு வந்துள்ளனர். மலேசியாவில் வசிக்கும் தமிழர்களான அவர்கள், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர், இவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என தவறாக நினைத்து அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அப்போது 75 வயது மூதாட்டியை கூட அவர்கள் பரிதாபம் பார்க்காமல் தாக்கினர். இந்த சம்பவத்தில் 4 பேர் பலத்த காயமடைந்த நிலையில், அந்த மூதாட்டி உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது. பின்னர், தாக்குதல் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் புதுக்கோட்டையில் தற்போது நடந்துள்ளது.

 புதுக்கோட்டை வந்த குடும்பத்தினர்

புதுக்கோட்டை வந்த குடும்பத்தினர்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் உள்ள கோயில்களில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த ஊர் மக்கள் கடந்த சில வாரங்களாகவே மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் இருந்துள்ளனர். இந்நிலையில், விருத்தாச்சலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்வதற்காக கீரனூரில் உள்ள ஒரு கோயிலுக்கு நேற்று வந்தனர்.

 திருடர்கள் என நினைத்து..

திருடர்கள் என நினைத்து..

கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள், பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் புறப்பட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த தாம்பூலம் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர். இதை பார்த்த உள்ளூர்வாசி ஒருவர், கோயிலில் உள்ள பொருட்களை ஒரு கும்பல் கொள்ளையடித்து செல்வதாக ஊர்க்காரர்களுக்கு தகவல் அளித்தார். இதன்பேரில், 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த ஆட்டோவை துரத்திச் சென்று மடக்கினர். பின்னர், எந்த விசாரணையும் இல்லாமல் ஆட்டோவில் 10 வயது சிறுமி உட்பட 6 பேரை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.

 சிறுமி கவலைக்கிடம் - வழக்கு பதிவு

சிறுமி கவலைக்கிடம் - வழக்கு பதிவு

இந்தக் கொலைவெறி தாக்குதலில் அனைவரும் படுகாயமடைந்தனர். அதே சமயத்தில், 10 வயது சிறுமி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அந்த சிறுமி உட்பட அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சந்தேகத்துக்கு இடமானவர்களை பார்த்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என போலீஸார் எச்சரித்தனர்.

English summary
Most pathetic incident in Pudukkottai, a family was attacked by a mob who think they were thieves. Police filed case against the assaulters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X