தாலியை கட்டு.. ஜாமீன் தரேன்.. நீதிபதி தீர்ப்பால் வெலவெலத்த கோர்ட்.. புதுக்கோட்டையில் சுவாரசியம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி குழந்தை பிறந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாது ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம் பெண் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் நீதிபதி கொடுத்த தீர்ப்புதான் தற்போது தமிழ்நாடு முழுக்க கவனம் ஈர்த்துள்ளது.
Recommended Video
புதுக்கோட்டை மாவட்டம் வாலமங்கலம் அடுத்த வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் அஜித். வயது 23. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா வயது 20 என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஆசை வார்த்தை
சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அஜீத் அவரை கர்ப்பமாக்கி விட்டார். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது இப்போதே திருமணமா செய்கிறேன், அப்போது திருமணம் செய்கிறேன் என்று கூறி ஏமாற்றி வந்து இருக்கிறார். கடைசி வரை கர்ப்பமான இருந்த நேரத்தில் அந்த பெண்ணை அஜித் திருமணம் செய்யவே இல்லை. அந்த பெண் பல முறை கேட்டும் அஜித் எதுவும் சொல்லாமல் நாட்களை கடத்தி வந்துள்ளார்.

பெண் ஏமாற்றம்
இதில் அந்த பெண்ணுக்கு பின்னர் குழந்தையும் பிறந்துள்ளது. மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த போது அதை பார்க்க கூட அஜித் வரவில்லை. தற்போது மூன்று மாதத்தில் சத்யாவிற்கு ஆண் குழந்தை உள்ளது. பல நாட்கள் காத்திருந்தும் அஜித் தன்னை திருமணம் செய்யாததால் சத்யா மனமுடைந்தார். இந்த நிலையில் அஜித் தன்னை ஏமாற்றி விட்டதாக மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சத்யா வழக்கு தொடர்ந்தார்

கர்ப்பம்
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அஜித் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி குழந்தையை பெற்றெடுத்த சத்யாவை திருமணம் செய்து கொண்டால் தான் உனக்கு ஜாமீன் தருவேன் என்று நீதிபதி கூறினார். இதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலேயே இந்த திருமணம் நடைபெற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

திருமணம்
இதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் அஜித்திற்கும் சத்யாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை கண்காணிப்பதற்காக நீதிபதி இரண்டு வக்கீல்களையும் நியமித்தார். வக்கீல்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமண கோலத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் பின்னர் இருவரையும் வாழ்த்திய நீதிபதி அஜித்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications