புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தந்தையின் இறுதி சடங்கு.. பெங்களூர் டூ புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்த பாசக்கார மகன்.. நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கிற்கு சாலை மார்க்கமாக வந்தால் தாமதமாகும் என்பதால் ஹெலிகாப்டரில் மகன் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Recommended Video

    தந்தையின் இறுதி சடங்கு.. பெங்களூர் டூ புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்த பாசக்கார மகன்.. நெகிழ்ச்சி

    புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் கே.ஆர்.சுப்பையா (72). இவரது ஒரே மகன் சசிகுமார். இவர் திருப்பூரில் ரெடிமேடு ஆடைகள் கம்பெனி நடத்தி வருகிறார். இதைத்தவிர இவருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தோனேசியாவில் நிறுவனங்கள் உள்ளன.

    இந்நிலையில் சசிகுமார் கம்பெனி வேலை காரணமாக வெளிநாடு சென்றிருந்தார். அப்போது சசிகுமாருக்கு அவரது தந்தை உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது.

    இறுதி ஊர்வலத்தில் 18 பேர் பலி... கடும் பனியால் மோதிய லாரி.. மேற்கு வங்கத்தில் சோகம். இறுதி ஊர்வலத்தில் 18 பேர் பலி... கடும் பனியால் மோதிய லாரி.. மேற்கு வங்கத்தில் சோகம்.

    சசிகுமார்

    சசிகுமார்

    உடனடியாக வெளிநாட்டில் இருந்த சசிகுமார் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தடைந்து பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடிக்கு சாலை மார்க்கமாக வந்தால் காலதாமதம் ஏற்படும் என்று கருதி பெங்களூரிலிருந்து ரூ 5 லட்சம் வாடகை கொடுத்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை வந்து இறங்கினார்.

    கார்

    கார்

    பின்னர் புதுக்கோட்டையிலிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக சொந்த ஊரான தென்னங்குடிக்கு புறப்பட்டார். பெங்களூரில் இருந்து சசிகுமார் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எடுத்துவந்த தனியார் ஹெலிகாப்டருக்கு தேனியிலிருந்து வெள்ளை நிற பெட்ரோல் எடுத்து வந்து நிரப்புவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

    வானம் மேகமூட்டம்

    வானம் மேகமூட்டம்

    ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு தயாராக இருந்த வேளையில் வானம் மேகமூட்டத்துடன் வானிலை சரியாக இல்லாததால் ஹெலிகாப்டர் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. பெங்களூரிலிருந்து ஹெலிகாப்டரை இயக்கி வந்த பைலட் மற்றும் உதவியாளர் ஆகியோரை புதுக்கோட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

    ஹெலிகாப்டர்

    ஹெலிகாப்டர்

    மேலும் இன்று காலை வானிலை சரியானதும் ஹெலிகாப்டர் பெங்களூருக்கு புறப்பட்டு செல்லும் என்று கூறப்படுகிறது. இவர் வந்ததும் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. தந்தையின் இறுதிச் சடங்கிற்கு எப்படியாவது சென்று சேர வேண்டும் என்பதற்காக ஓடோடி வந்த மகனை பார்த்து ஊர்மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். தந்தைக்காக ரூ 5 லட்சம் விமானத்திற்கு செலவிட்டது இல்லாமல் அந்த தனியார் ஹெலிகாப்டரை இயக்கிய குழுவினரையும் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள சம்பவமும் அந்த மகனுக்கு தந்தையின் மீது எத்தனை பாசம் என்பதை உணர்த்துகிறது. பெற்றோருக்கு கடைசி காலத்தில் ஒரு வாய் சோறு போடாத சில கல் நெஞ்சக்காரர்கள் இருக்கும் உலகில் இப்படிப்பட்ட பாசமிகுந்த மகன்களும் இருப்பதை நினைத்து தாய்மை போற்றப்படுகிறது.

    English summary
    Youth takes a private helicopter to attend his father's funeral as he arrived from Indonesia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X