புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வு: மத்திய அரசுக்கு ரூ.150,மாநில அரசுக்கு ரூ. 400..தனியாருக்கு ரூ.600

கொரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 ஆகவும் சீரம் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

புனே: நாடு முழுவதும் கொரோனாவிற்கு தினசரியும் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 ஆகவும் சீரம் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அரசுக்கு ரூ.150 விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Covishield Vaccine விலை இரண்டு மடங்கு அதிகரிப்பு.. 1 டோஸ் 400 முதல் 600 வரை ஆகும்

    தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பெருட்கள் விலை அதிகரித்துள்ளதால் தடுப்பூசியின் விலையும் அதிகரித்துள்ளதாக கோவிஷீல்டு உற்பத்தி நிறுவனமாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளில் தடுப்பூசியின் விலையை ஒப்பிட்டு அந்த நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

     கொரோனா நோயாளிகள் பற்றாக்குறைன்னு விளம்பரம் கொடுங்க-மத்திய பாஜக அரசை விடாமல் வறுக்கும் ப. சிதம்பரம் கொரோனா நோயாளிகள் பற்றாக்குறைன்னு விளம்பரம் கொடுங்க-மத்திய பாஜக அரசை விடாமல் வறுக்கும் ப. சிதம்பரம்

    கொரோனா இரண்டாவது அலை

    கொரோனா இரண்டாவது அலை

    நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 2023 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தடுப்பூசி கொள்முதல்

    தடுப்பூசி கொள்முதல்

    நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக சீரம் மருந்து நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் மருந்து நிறுவனங்களிடம் இருந்து மருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

    சீரம் நிறுவனம்

    சீரம் நிறுவனம்

    முதல் கட்டமாக 1.10 கோடி டோஸ் கோவிஷீல்ட் மருந்துகளை மத்திய அரசு ரூ.210 விலையில் சீரம் நிறுவனம் வழங்கியது. இரண்டாம் கட்டமாக சீரம் நிறுவனத்திடம் இருந்து 4.5 கோடி டோஸ் மருந்துகளை கொள்முதல் செய்தது மத்திய அரசு.

    10 கோடி டோஸ்கள் விலை குறைவு

    10 கோடி டோஸ்கள் விலை குறைவு

    மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், முதல் 10 கோடி தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு வெளி சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று பூனாவாலா தெரிவித்திருந்தார்.

    தடுப்பூசி செலுத்த அனுமதி

    தடுப்பூசி செலுத்த அனுமதி

    நாடு முழுவதும் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநில அரசுகள் தடுப்பூசியை கொள்முதல் செய்து கொள்ளலாம் எனவும் அனுமதித்துள்ளது.

    ரூ.400, ரூ.600

    ரூ.400, ரூ.600

    இந்தநிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் சீரம் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது. அமெரிக்காவில் ஒரு டோஸ் ரூ. 1500 ஆக விற்பனை செய்வதாகவும், ரஷ்யா, சீனா உடன் ஒப்பிட்டு சீரம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தனியாருக்கு 50 சதவிகிதம், அரசுக்கு 50 சதவிகிதம் என மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மத்திய அரசுக்கு ரூ.150

    மத்திய அரசுக்கு ரூ.150

    அதே நேரம் தங்கள் உற்பத்தியில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கு எப்போதும் போல ரூ.150 விலையில் வழங்கவுள்ளதாகவும் சீரஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் விலை வெளிச்சந்தையில் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படும் என்பது குறித்து இது வரைக்கும் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

    English summary
    Serum Institute of India’s Covishield will be available to state governments at Rs 400 a dose and private hospitals at Rs 600 a dose, the Pune headquartered company said Wednesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X