''ஐயா..கேர்ள் பிரண்ட் லவ் பண்ண மாட்றா; நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்'' போலீஸ் கமிஷனரிடம் கூறிய இளைஞர்!
புனே: ''என் காதலுக்கு உதவி செய்யுங்கள்'' என்று போலீஸ் கமிஷனரிடம் இளைஞர் ஒருவர் கேட்டது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதற்கு சாமர்த்தியமாக பதில் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் போலீஸ் கமிஷனர்.

மராட்டிய மாநிலம் புனே நகர போலீசார் ஒரு சிறப்பு குழு அமைத்து மக்களின் குறைகள் மற்றும் பிரச்னைகளை கேட்டறிந்து வருகின்றனர். இணையத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் இடையே எழும் பிரச்னைகளை கேட்டறிந்து அதனை தீர்த்து வருகின்றனர் காவல் துறையினர். போலீசாரின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா, கடந்த திங்கட்கிழமை ட்விட்டரில் நேரலை வாயிலாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் உரையாற்றும்போது, ஒரு இளைஞர் அமிதாப் குப்தாவிடம், தான் தனது பெண் தோழியை காதலித்து வருவதாகவும், தன் காதலை அவர் ஒப்புக்கொள்ள ஏதேனும் உதவி செய்யுங்கள் என்றும் கேட்டார். இதனை சற்றும் எதிர்பாராத கமிஷனர் அமிதாப் குப்தா கொஞ்சம் ஆடித்தான் போனார்.
ஆனாலும் இதற்கு பதிலளித்த அமிதாப் குப்தா, அந்த பெண் சம்மதம் இன்றி நாம் எதுவும் செய்யமுடியாது. நீங்களும் அவர் விருப்பத்திற்கு மாறக எந்தொரு தவறான செயலில் ஈடுபடக்கூடாது.ஒருவேளை உங்கள் காதலுக்கு அவர் சம்மதம் தெரிவித்தால், எனது வாழ்த்துகளும் ஆசிர்வாதமும் எப்போதும் உங்களுக்கு இருக்கும் என்று தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications