புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது முடியுற வரை! "அதுக்கு" வாய்ப்பே இல்லை! திருமணம் முடிந்த இரவே தம்பதி கண்டிஷன்! குவியும் பாராட்டு!

Google Oneindia Tamil News

புணே: மகாராஷ்டிராவின் கோல்ஹாபூரில் தண்ணீர் பிரச்சினையை முன்னிறுத்தி டேங்கர் லாரியில் ஊர்வலமாக சென்ற புதுமண தம்பதி தண்ணீர் தட்டுப்பாடு தீரும் வரை முதலிரவு நடத்த மாட்டோம், தேனிலவுக்கும் செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் கோல்ஹாபூரை சேர்ந்தவர் விஷால் கோலேகர் (32). இவருக்கும் அபர்ணா என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி வியாழக்கிழமை அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த ஜோடி காரில் ஊர்வலமாக செல்வார்கள் என நினைத்த போது அவர்கள் திடீர் அதிர்ச்சி கொடுத்தனர். அதாவது தண்ணீர் டேங்கர் லாரியில் ஊர்வலமாக வந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.. பெரும்பான்மையை நிரூபித்தார் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே! நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.. பெரும்பான்மையை நிரூபித்தார் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!

பேனர்

பேனர்


மேலும் அந்த லாரியில் ஒரு பேனர் இருந்தது. அதில் கோல்ஹாபூர் பகுதியில் உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வரை தேனிலவுக்கு செல்ல மாட்டோம். முதலிரவும் கிடையாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்ப்பதற்கு வினோதமாக இருந்தால் புதுமண தம்பதியின் சமூக உணர்வு அனைவராலும் பாராட்டப்படுகிறது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் மேற்கு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் கோலேகர். இவர் கூறுகையில் பிரின்ஸ் கிளப் எனும் சமூகவலைதள குரூப்பை வைததுள்ளோம். இதன் மூலம் மங்கல்வர் பேத் பகுதி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பிரச்சினை இருந்து வருவது குறித்து நாங்கள் புகார் அளித்தோம்.

தண்ணீர்

தண்ணீர்

ஆனால் எத்தனையோ புகார்களை அளித்தும் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் டேங்கர் லாரிகளை நம்பியுள்ளனர். இதனால் கூலி வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுகிறார்கள் எனறார்கள். இவர்களின் திருமணத்தின் போது இவர்கள் தண்ணீர் லாரிகளில் ஊர்வலகமாக சென்றதை போல் இவரது குடும்பத்தினர் காலி தண்ணீர் குடங்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இவர்களின் இந்த சமூக பொறுப்புணர்வை கண்டு பொதுமக்கள் வியக்கிறார்கள். இந்த சிறிய வயதில் இத்தனை பக்குவமா என நெட்டிசன்களும் நெகிழ்ச்சி பொங்க இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் சிலர் கூடிய சீக்கிரம் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து நீங்கள் நல்லதொரு வாழ்க்கையை தொடங்க வேண்டும் என வாழ்த்துகிறார்கள்.

English summary
Maharastra couple postpones their honey moon or first night till water problem resolves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X