ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை பொருளாதார சிக்கல் -பிஞ்சு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்றும் 8 ஈழத் தமிழர்கள் வருகை

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நேற்று 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்த நிலையில், இன்று காலை மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்தனர்.

Recommended Video

    இலங்கை பொருளாதார நெருக்கடி - குழந்தைகள் உள்பட மேலும் 8 ஈழத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த விலைவாசி உயர்வால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து அகதிகளாக குடும்பம் குடும்பமாக கடல் வழியாக படகுகளில் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை 142 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

     8 Tamils came to Dhanushkodi as refugees even today

    இந்நிலையில், இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையுடனும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகள் என 8 பேரும் தலைமன்னாரில் இருந்து பைபர் படகு மூலம் தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாவது தீடையில் நேற்று முன்தினம் வந்திறங்கினர். இதுபற்றி தகவலறிந்தும் கடலோர காவல் படையினர், ஹோவர் கிராஃப்ட் ரோந்து கப்பல் மூலம் 8 பேரையும் மீட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்

    ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் நேற்று 8 பேர் கைக்குழந்தைகளுடன் வந்த நிலையில், இன்றும் 3 குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 8 பேர் கைக்குழந்தைகளுடன் வந்துள்ளனர். இராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி மணல் திட்டில் இன்று அதிகாலை இலங்கையில் இருந்து, 8 பேர் கை குழந்தைகளுடன் வந்து இறங்கினர். இதுகுறித்த தகவலின் பேரில் அவர்களை மீட்ட கடலோர காவல் படையினர், மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வந்தவர்களையும் சேர்த்து இதுவரை இலங்கையில் இருந்து 150 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே இருப்பது பத்தாதா? இலங்கை மக்களுக்கு இடியாய் விழுந்த அறிவிப்பு! மண்ணெண்ணெய் 1 லி. இவ்வளவா? ஏற்கனவே இருப்பது பத்தாதா? இலங்கை மக்களுக்கு இடியாய் விழுந்த அறிவிப்பு! மண்ணெண்ணெய் 1 லி. இவ்வளவா?

    English summary
    Due to the economic crisis in Sri Lanka, 8 more Eelam Tamils including children arrived to Dhanushkodi today as refugees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X