1+1.. வெறும் 48 நாளில்.. உதயநிதிக்கு ஸ்டாலின் தந்த புது "அசைன்மென்ட்".. அப்போ அதிமுக? குழம்பிய தாமரை
ராமநாதபுரம்: ஆளும் திமுக தற்போது தென் மண்டலத்தில் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கொங்கு மண்டலத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கவனம் செலுத்தி வந்தனர்.
கொங்கு மண்டலத்தில் திமுக வலிமை குறைவாக இருந்ததால் அங்கு தீவிரமாக கவனம் செலுத்தி வந்தனர். இதன் பலனாக நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் கொங்கு மண்டலம் முழுக்க திமுகதான் வென்றது.
சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரிதாக வெற்றி பெறாத திமுக, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தை மொத்தமாக ஸ்வீப் செய்தது.
கோவை கார் வெடிப்பு.. கவலைபடாத திமுக.. நயன்தாரா குழந்தை பெற்றதை ஆராய்கிறது.. சிவி சண்முகம் அட்டாக்

தெற்கு
இதன் காரணமாக தென் மண்டலத்தில் திமுகவால் பெரிய அளவில் கவனம் செலுத்த முடியவில்லை. திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் பிடிஆர், மூர்த்தி, மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் தவிர வேறு யாரும் பெரிதாக தென் மண்டலத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில்தான் ஆளும் திமுக தற்போது தென் மண்டலத்தில் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கொங்கு மண்டலத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கவனம் செலுத்தி வந்தனர்.

ஸ்டாலின்
முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன் மூர்த்தி வீட்டு திருமண விழா, காலை உணவு திட்ட தொடக்க விழா என்று அடுத்தடுத்து மதுரைக்கு சென்றார். அங்கு பல்வேறு தென் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அதேபோல் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி வைக்கவும் அவர் கன்னியாகுமரி சென்றார். அங்கு தென் மண்டல நிர்வாகிகளை சந்தித்து நீண்ட ஆலோசனைகளை செய்தார். இந்த நிலையில் தேவர் ஜெயந்திக்கு முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் செல்வதாக இருந்தது.

பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை நடந்து வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பசும்பொன் செல்ல இருக்கிறார். இன்று அவர் பசும்பொன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மண்டலத்தில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டு வருகிறார்.

48 நாட்கள்
48 நாட்களுக்கு முன்புதான் சரியாக உதயநிதி ஸ்டாலின் ராமநாதபுரம் சென்றார். அப்போது தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்விற்கு பொதுவாக திமுக அமைச்சர்கள் செல்வார்கள். ஆட்சியில் இல்லாத நேரங்களில் எம்எல்ஏக்கள் செல்வார்கள். கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் சென்றார், ஆனால் இந்த முறை உதயநிதி ஸ்டாலின் சென்றார்.

1+1
ஒரு பக்கம் தேவர் சமூகம்.. இன்னொரு பக்கம் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் என்று இரண்டு பிரிவினரிடம் இருந்தும் ஆதரவு பெறும் வகையில் உதயநிதி இந்த பயணங்களை மேற்கொண்டு உள்ளார். தேவேந்திர குல வேளாளர் பிரிவை சேர்ந்த இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் தென் மண்டலத்தில் முக்கியமான ஒன்றாகும். தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் தென் மண்டலத்தில் முக்கியமான ஒன்றாகும்.

தேவர்
இந்த தேவேந்திர குல வேளாளர் பிரிவினரின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் பட்சத்தில் அது மிகப்பெரிய கேம் சேஞ்சாக அமையும். தென் மண்டலத்தில் இவர்களின் ஆதரவை பெறும் கட்சி 2024 லோக்சபா தேர்தலில் எளிதாக வெற்றிபெற முடியும். இந்த நிலையில்தான் இவர்களின் ஆதரவை பெறும் வகையில் உதயநிதியை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதேபோல் தேவர் சமூக வாக்குகளும் முக்கியம் என்பதால் குரு பூஜைக்கும் உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

திட்டம்
இன்னொரு பக்கம் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னுக்கு வரவில்லை. அவர் நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செய்கிறார். அவர் சார்பாக அனுப்பப்பட்ட உதயகுமார் போன்ற அதிமுக தலைவர்களை பசும்பொன்னில் தேவர் சமூகத்தினர் உள்ளேயே வரவிடவில்லை என்றும் கூட செய்திகள் வெளியாகி உள்ளன. அதேபோல் பாஜகவும் பெரிதாக தலைவர்கள் யாரையும் இதுவரை குரு பூஜைக்கு அனுப்பவில்லை. பிரதமர் மோடி வருவதாக இருந்ததும் கடைசியில் இல்லை என்று ஆனது. இப்போது வரை திமுக மட்டுமே இந்த தேவர் குரு பூஜையில் தீவிர கவனம் செலுத்தி ஸ்கோர் செய்துள்ளது.