இராமநாதபுரம் கடலில் விழுந்த உருவம்.. ராமேஸ்வரம் பாம்பன் நடு பாலத்தில் யாரது? ஒன்னுமே புரியலயே
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட பாம்பன் பாலத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பாலத்தில் குவிந்து பார்வையிட்டு செல்கிறார்கள்.. இது அப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இளைஞர் ஒருவர் திடீரென கீழே குதித்துள்ளார்.. யாரிந்த இளைஞர்?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவை அடைய மிக முக்கிய வழித்தடமாக பாம்பன் ரயில் பாலம் உள்ளது.. 1914-ல் கட்டப்பட்ட இந்த பாலம் பழுதடைந்து போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லாமல் போனது..

இராமநாதபுரம் ராமேஸ்வரம்
எனவே புதிய பாலத்தை ரயில்வே நிர்வாகம் கட்டியிருக்கிறது. ஏற்கனவே 100 ஆண்டுகளை கடந்து சேவையாற்றிய பழைய ரெயில் பாலத்துக்கு அருகிலேயே இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. பழைய பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாலத்தில் போக்குவரத்தும் நடந்து வருகிறது.
அந்தவகையில், ராமேசுவரம் அருகே பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள ரெயில் மற்றும் ரோடு பாலங்கள் மிக முக்கிய இடத்தை பெற்று வருகின்றன.. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்துக்கு வந்து செல்கிறார்கள்.. மேலும் உள்ளூர் மக்களும், பாம்பன் ரோடு பாலம் வழியாக தங்களது வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
பாம்பன் பாலம்
இப்படி வருகிறவர்கள் பாம்பன் ரோடு பாலத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தி, கடலின் அழகை வேடிக்கை பார்த்து செல்கிறார்கள்..
இந்நிலையில், பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதியில் தடுப்பு சுவரின் மேலே ஏறி நின்று இளைஞர் கடலில் குதித்திருக்கிறார்.. இதனை ராமேசுவரத்தில் இருந்து சென்ற ரெயிலில் பயணித்த பயணி ஒருவர், வீடியோ எடுத்துள்ளார்..
பாம்பன் பாலத்தை ரெயில் கடந்தபோது இயற்கை காட்சிக்காக தன்னுடைய செல்போனில் பதிவு செய்தபோது, திடீரென அந்த நபர் கடலில் குதித்த காட்சியும் அதில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் பதிவிடப்பட்டு, படுவேகமாக பரவ துவங்கிவிட்டது.
ரீல்ஸ் வீடியோ பதிவு
ஆனால், கடலில் குதித்த அந்த நபர் யார்? அவரது கதி என்ன? எதற்காக ரோடு பாலத்தில் நின்று கடலில் குதித்தார்? ஆபத்தான பகுதியிலிருந்து குதித்துள்ளதால் தற்கொலை செய்ய வந்தாரா? அல்லது ரீல்ஸ் வீடியோ பதிவிட வந்தாரா? அல்லது இந்த வீடியோவே பொய்யா? என்று தெரியவில்லை..
ஏனெனில் தற்போது விஸ்வரூபமெடுத்து வரும் ஏஐ போன்ற தொழில்நுட்பத்தால் ஆபத்தான பல வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.. எனவே அதுபோன்று இதுவும் ஏஐ பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோவா தெரியவில்லை..
போலீசார் விசாரணை
இதுகுறித்து தெரிய வந்ததும், போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.. இது குறித்து பாம்பன் போலீஸார் சொல்லும்போது, "செல்போனில் செல்ஃபி, ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில் இதுபோன்ற விபரீத செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள்.. சிலர் தற்செயலாக கடலில் விழுந்து விடுகிறார்கள்.. சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் குதிக்கின்றனர். எனவே, இந்த வீடியோ குறித்த விசாரணையை துவங்கியிருக்கிறோம்:" என்றனர்.
இதனிடையே, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதைக்கண்ட இணையவாசிகள், இதற்கு முன்பு ஏற்கனவே பல்வேறு கால கட்டங்களில் இந்த பாம்பன் பாலத்திலிருந்து தற்கொலை செய்துள்ளனர்.. தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதிலும் பாலத்தின் ஆபத்தான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications