கச்சத்தீவு அருகே 6 தமிழக மீனவர்கள் கைது..இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம்: நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று விசைப்படகுகளில் சுமார் 500 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். கச்சத்தீவுக்கும் கோடியகரைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்தவர்களா அல்லது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களா என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
கடந்த வாரம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது படகுகளை சிறைப்பிடித்தனர். இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் ஜூலை 3ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் கோரி தமிழக முதல்வர், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடந்த 4ஆம் தேதியன்று கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு, மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்று தமிழக முதலவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நேற்றைய தினம் 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications