வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்.. பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை
ராமநாதபுரம்: வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. முன்னெச்சரிக்கையாக. விசைப்படகுகளுக்கு மீன்பிடி இன்று அனுமதி டோக்கன் வழங்கபடாததால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னமாக மாறி, ஒடிசா பாலசோர் துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 310 கி.மீ.,லும், மேற்குவங்கம் திகா துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 250 கி.மீ.,லும், சாகர் தீவு தென் கிழக்கில் 210 கி.மீ.,ல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள வட மேற்கு பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகத்தின் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில், இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் ஆண்டு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கடலோரப் பகுதிகளான ராமநாதபுரம், ராமேஸ்வரம் பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடிக்க செல்வதற்கு அனுமதி டோகன் வழங்கப்படாததால் மீனவர்களின் விசைப்படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இபோல், நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கப்படாததால், மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் மீன்பிடிக்க அனுமதி வழங்காததால் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications