ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சவுதி அரேபியாவின் அபா சர்வதேச விமான நிலையத்தில் திடீரென பயங்கர ட்ரோன் தாக்குதல்.. பயணிகள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் இன்று நடந்த ட்ரோன் தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்தனர் என்று அண்டை நாடான ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்ட சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

இதனிடையே அபா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்க முயன்ற இரண்டாவது ட்ரோன் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்று சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்தது.

சவுதி அரேபியா 2015 ஆம் ஆண்டில் இருந்து ஏமன் நடந்து வரும் உள்நாட்டு போரில் தலையிட்டுள்ளது. ஹுத்தி தலைநகர் சனாவைக் கைப்பற்றி உள்ளது. இந்த சூழலில் ஈரான் ஆதரவுடன் போரில் பங்கேற்றுள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பலமுறை எல்லை தாண்டிய தாக்குதல்களை சவுதி அரேபியா மீது நடத்தி வருகின்றனர்.

ட்ரோன் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கம்.. புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு! ட்ரோன் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கம்.. புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

அப்படித்தான் சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் இன்று நடந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பயணிகள் விமானம் சேதம் அடைந்துள்ளது.

அபா விமான நிலையம்

அபா விமான நிலையம்

இது அபா விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் ஆகும். இதை "போர்க்குற்றம்" என்று சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது. விமான ஓடுபாதைக்கு அருகிலுள்ள விமான நிலையத்தின் சில பகுதிகளைத் ட்ரோன் தாக்கியதாக கூறப்படுகிறது.

தற்காலிகமாக நிறுத்தம்

தற்காலிகமாக நிறுத்தம்

இதனிடையே "உள்வரும் மற்றும் புறப்படும் விமானங்கள் மற்றும் விமான நிலையத்தில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக" அபா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து கிளர்ச்சியாளர்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

கிளார்ச்சியாளர்கள்

கிளார்ச்சியாளர்கள்

ஆகஸ்டில் இருந்து தான் கிளர்ச்சியாளர்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.
ஏமனில் நீண்டகாலமாக நடந்து வரும் மோதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இதன் விளைவாக ஐக்கிய நாடுகள் சபை உலகின் மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று ஏமனை அழைக்கிறது.

English summary
A drone attack on Saudi Arabia's Abha airport wounded eight people, a second drone attempting to attack Abha International Airport was intercepted and shot down .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X