சவுதி, யூஏஐ உள்பட 6 அரபு நாடுகளில் ‛துரந்தர்' திரைப்படத்துக்கு தடை.. ஏன் தெரியுமா?
டெல்லி: ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‛துரந்தர்'. இந்த திரைப்படத்தை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட 6 அரபு நாடுகள் தடை செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட்டில் தற்போது நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‛துரந்தர்'. திரைப்படத்தில் அக்ஷய் கண்ணா, அர்ஜூன் ராம்பால், மாதவன், சஞ்சய் தத், சாரா அர்ஜூன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை ஆதித்ய தார் இயக்கி உள்ளார். 2016ல் காஷ்மீரின் உரி தாக்குதலை மையப்படுத்தி ‛உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக் 2019'என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அடுத்ததாக அவர் ‛துரந்தர்' திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த ‛துரந்தர்' திரைப்படம் ‛ஸ்பை த்ரில்லர்' படமாகும். அதாவது உளவு அதிகாரியின் கதைக்களமாக இந்த திரைப்படம் உள்ளது. 1999ம்ஆம் ஆண்டு கந்தகாரில் இந்திய விமானம் கடத்தப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் டெல்லி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடக்கிறது. இதற்கெல்லாம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஹம்ஸா என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் உளவாளியாக ரன்வீர் சிங் நுழைகிறார். அதன்பிறகு இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை கண்டுபிடித்து பதிலடி கொடுத்தாரா? என்பது தான் திரைப்படத்தின் கதையாகும்.
இந்நிலையில் தான் ‛துரந்தர்' திரைப்படத்துக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட 6 அரபு நாடுகளும் தடை விதித்துள்ளன. பாலிவுட் திரைப்படங்களுக்கு இங்கு அதிகமான ரசிகர்கள் உள்ளன. இந்த 6 நாடுகளும் நல்ல வருவாயை ஈட்டி கொடுக்கும். இந்நிலையில் தான் ‛துரந்தர்' திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிரான சிந்தனையுடன் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டி அரபு நாடுகள் தடை போட்டுள்ளன. அரபு நாடுகளில் எப்படியாவது இந்த திரைப்படத்தை வெளியிட பட தயாரிப்பாளர்கள் முயன்றனர். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதுபற்றி பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‛‛ இந்த திரைப்படம் பாகிஸ்தானுக்கு எதிரான படம் என்று கருதுவதால் அரபு நாடுகள் அனுமதி வழங்கவில்லை'' என்று கூறினர்.
6 அரபு நாடுகளில் இந்த திரைப்படம் தடை செய்யப்பட்டாலும் கூட இந்தியா மற்றும் பிற வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வசூல் முதல் வாரத்திலேயே ரூ.200 கோடியை கடந்துள்ளது. திரைப்படம் பற்றி இயக்குநர் ஆதித்ய தார் கூறுகையில், ‛‛துரந்தர் திரைப்படம் உண்மையான ஜியோ பாலிடிக்கிஸ் மற்றும் ரா உளவுத்துறையின் ஆபரேஷன்களை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட முறையில் யாரையும் பற்றி பேசவில்லை.
வெளிநாடுகளில் திரைப்படத்துக்கு தடை வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளது.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சமீபத்தில் வெளியனா ‛பைட்டர்', ஸ்கை ஃபோர்ஸ், தி டிப்ளமேட், ஆர்ட்டிக்கிற் 370, டைகர் 3, தி காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வெளிநாடுகளில் தடையை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications