ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெக்காவில் இருந்த "டவரை" தாக்கிய சக்தி வாய்ந்த மின்னல்.. அதன்பின் நடந்தது என்ன? தீயாக பரவிய வீடியோ

Google Oneindia Tamil News

ரியாத்; சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவின் கடிகார கோபுரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    மெக்காவில் இருந்த டவரை தாக்கிய சக்தி வாய்ந்த மின்னல் - வீடியோ

    இந்த சம்பவத்தால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    பொதுவாக மேலிருந்து தாக்கும் மின்னல் இந்த பகுதியில், கட்டடத்தின் மீதிருந்து வான் நோக்கி விரிந்து பரந்து சென்றிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

     உலகின் விலை உயர்ந்த சொகுசு பங்களாவில் தங்கிய சவுதி இளவரசர்! அப்படி என்ன ஸ்பெஷல்? உலகின் விலை உயர்ந்த சொகுசு பங்களாவில் தங்கிய சவுதி இளவரசர்! அப்படி என்ன ஸ்பெஷல்?

    மின்னல்

    மின்னல்

    மின்னல் பார்க்க அழகானவையாக தெரிந்தாலும் மிகவும் ஆபத்தானவையாகும். இந்த மின்னல் தோராயமாக 300 மில்லியன் வாட்ஸ் சக்தி கொண்டதாகும். இதன் மூலம் ஊருக்கே நம்மால் கரண்ட் கொடுக்க முடியும். இவ்வளவு மின்சாரமும் ஒருவரை தாக்கினால் நிச்சயம் அவருக்கு மரணம்தான். இந்நிலையில் மெக்காவின் கடிகார கோபுரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கிய சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.

    உருவாகும் விதம்

    உருவாகும் விதம்

    மேகத்திற்கு உள்ளே உண்டாகும் மின்னல், வெவ்வேறு மேகத்திற்கு இடையே ஏற்படும் மின்னல் , மேகத்திற்கும் பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல் என மின்னல்கள் பொதுவாக மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன. இதில் மேகத்திற்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல், மேகத்தின் அடிப்பகுதியில் இருக்கும் எதிர்மின் அயனியானது புவியில் இருக்கும் நேர்மின் அயனியை கவர்ந்திழுக்கும்போது ஏற்படுகிறது. இதுவே மிகவும் ஆபத்தானது. இவ்வகை மின்னலே பூமியில் இருக்கும் மரம், கட்டடம் உட்பட்ட உயரமான இடங்களை தாக்கி, சில நேரங்களில் மனிதனையும் பலி வாங்குகிறது.

    ஒலியை விட வேகம்

    ஒலியை விட வேகம்

    மேகத்திற்கு உள்ளே உண்டாகும் மின்னல் என்பது மேகத்திற்குள் உள்ள நேர்மின் அயனி மற்றும் எதிர்மின் அயனி கவர்தலினால் ஏற்படுகிறது. மேகத்தில் உள்ள நேர்மின்அயனி அருகில் இருக்கும் மற்றொரு மேகத்தின் எதிர்மின் அயனியை கவர்தலினால் ஏற்படும் மின்னல் வெவ்வேறு மேகத்திற்கு இடையே ஏற்படும் மின்னல் என்கிறோம். பொதுவாக மின்னலும் இடியும் ஒன்றாகத்தான் உருவாகிறது. ஆனால் ஒலியை விட ஒளி வேகமாக பயணிப்பதால் நமக்கு மின்னல்தான் முதலில் தெரிகிறது. இப்படியான நிலையில் மெக்காவில் பதிவான மின்னல் பூமியிலிருந்து வான்நோக்கி விரிந்து சென்றிருக்கிறது.

    ஈரப்பதம்

    ஈரப்பதம்

    நடப்பு ஜூலை மாதத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளில் அதீத ஈரப்பதம் நிலவி வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பருவமழை குறைந்ததன் விளைவாகவே இந்த அளவு ஈரப்பதம் நிலவி வருவதாகவும், இதன் காரணமாக சவுதி அரேபியாவில் பரவலான பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்யும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் ஓஹியோவில் மின்னல் ஒன்று தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது மெக்கா மின்னல் சம்பவம் பேசப்பட்டு வருகிறது.

    English summary
    A clip was shared online by a user named Mulham H along with a caption that translates to, "A few days ago, a lightning strike struck the Burj al-Saa during the rain in Makkah."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X