''பாட்ஷா பாய்'' மீது கை வைத்த அதிமுக கவுன்சிலர்! அமைச்சர் கே.என்.நேருவுக்கு பறந்த போன் கால்கள்!
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக நகர்மன்றத் தலைவர் பாட்ஷாவை அதிமுக கவுன்சிலர் தள்ளிவிட்ட நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக சேர்மன் மீது அதிமுக கவுன்சிலர் கை வைத்தது பற்றி சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவின் கவனத்துக்கு திமுகவினர் உடனடியாக கொண்டு சென்றனர்.
யார் மீது யார் மீது கை வைப்பது, நம்ம ஆட்சியிலேயே இப்படியா என கொதித்துப் போன அமைச்சர் நேரு, சம்பந்தப்பட்ட அதிமுக கவுன்சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருக்கிறாராம்.

எடப்பாடி ஊர்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் நகராட்சி தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த பாட்ஷா. இவரை பாட்ஷா பாய் என்று தான் அப்பகுதி மக்கள் உட்பட திமுகவினர் அனைவரும் அழைப்பார்கள். என்னதான் சேர்மனாக இருந்தாலும் கூட, அந்தப் பதவிக்கான பந்தாவையும், தோரணையையும் வெளிக்காட்டாமல் எளிமையாக இருக்கக் கூடியவர் பாட்ஷா.

கீழே தள்ளி
இந்நிலையில் இன்று நடைபெற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஏதோ வாக்குவாதம் எழுந்தது. அது கைகலப்பில் முடியும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. இதனிடையே பேசிக்கொண்டிருக்கும் போதே திமுக நகர்மன்றத் தலைவர் பாட்ஷாவின் நெஞ்சில் கை வைத்த அதிமுக கவுன்சிலர் நாராயணன் என்பவர் அவரை தள்ளிவிட்டார். இதனிடையே சுதாரித்துக் கொண்ட பாட்ஷா கீழே விழாமல் மேஜையை பிடித்துக் கொண்டார்.

திமுக கவுன்சிலர்கள்
திமுக ஆட்சியில் திமுக சேர்மன் மீதே கைவைக்கும் அளவுக்கு துணிச்சல் வந்துவிட்டதா என ஆவேசம் அடைந்த திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் நாராயணனை சூழ்ந்தனர். இதைப்பார்த்த நகர்மன்றத் தலைவர் பாட்ஷா எல்லோரையும் அமைதிப்படுத்தி அங்கிருந்து வெளியேறினர். இருப்பினும் இந்த நிகழ்வு எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் நடைபெற்றது என்பதால் அது குறித்த தகவலை சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
Recommended Video

சட்டப்பூர்வ முறையில்
எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் அதிமுக கவுன்சிலர்கள் இப்படி ஆடுவதாக புகார் தெரிவிக்கும் திமுக கவுன்சிலர்கள், அமைச்சர் நேரு அறிவுறுத்தல் படி இந்த விவகாரத்தை சட்டப்பூர்வ முறையில் கையாள திட்டமிட்டுள்ளனர்.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications