பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லைதான்.. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கும் போவேன்- எடப்பாடி
சேலம்: பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையவே கிடையாது; ஆனால் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வாய்ப்பிருந்தால் போவேன் என தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அயோத்தியில் ஜனவரி 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நாடு முழுவதும் இந்துத்துவா அமைப்புகள் பொதுமக்களை சந்தித்து இதற்கான அழைப்பிதழை தந்து வருகின்றனர். அதே நேரத்தில் ஜனவரி 22-ந் தேதியன்று அயோத்திக்கு பொதுமக்கள் வர வேண்டாம்; 23-ந் தேதிக்கு பின்னர் வரலாம் என பிரதமர் மோடி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு: இன்னொரு பக்கம், சனாதன தர்மப்படி பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை நடத்த இந்து மதத் தலைவர்களான சங்கரச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மோடி கையால் ராமர் சிலையை தொடக் கூடாது என இந்து சாமியார்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு: ராமர் கோவில் திறப்பை பாஜக அரசியலாக்குவதால் இந்த விழாவில் பங்கேற்பது இல்லை என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் அறிவித்துள்ளன. ஆனால் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ள அதிமுக, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அனைவரும் செல்லலாம். அனைத்து மதத்தினரும் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளது.
பாஜக கூட்டணி இல்லை: சேலத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது. அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமையும். அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்ததும் முறைப்படி அறிவிக்கப்படும்.
லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள்: லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை. லோக்சபா தேர்தலில் வெல்லும் வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும். அதிமுகவில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர்.
ராமர் கோவில் திறப்பு: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம். யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்கள் அனைவரும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கலாம். எனக்கு காலில் வலி இருக்கிறது. அதனால் வாய்ப்பிருந்தால் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications