அடம்பிடிக்கும் கர்நாடகா! விஸ்வரூபமெடுக்கும் மேகதாது அணை விவகாரம்! மேட்டூர் அணையில் முக்கிய ஆய்வு!
சேலம் : கர்நாடகா மாநிலத்தில் தற்போது மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டும் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், காவிரி நீர் மேலாண்மை குழு தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார் ஆகியோர் இன்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
வரும் 17ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்திற்கு எதிரான மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கு மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது.
காவிரி நடுவர் மன்ற, இறுதி தீர்ப்பின்படி கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபிணி அணைகளில் இருந்து, தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுக்கு, மாதாந்திர அடிப்படையில் 177.25 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும்.

மேகதாது அணை
இந்த தண்ணீரை தேக்க மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு உரிமையில்லை என்று மாநில பொதுப்பகுதிகளில் ஆண்டுக்கு, 80 டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா அரசு கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபிணி அணைகளில் இருந்து நீரை தருமா அல்லது மேகதாதுவில் இருந்து நீரை தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகம் எதிர்ப்பு
இதனால் காவிரி நடுமன்ற தீர்ப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளதால் தமிழக அரசு தீவிரமாக இதனை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்ற முடிவில் கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கும் நிலையில் இந்த மாதம் 22ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் 23ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

மேட்டூர் அணையில் ஆய்வு
இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு முன்பாக மேட்டூர் அணையில் நீர் இருப்பு நீர்வரத்து நீர் இருப்பு குறித்தும் பாசத்தின் பரப்பளவு மற்றும் பாசன தேவைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று சிறப்புக் குழுவினர் மேட்டூர் அணை வந்தனர் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார், காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் ஆகியோருடன், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.

அதிகாரிகளுடன் ஆலோசனை
ஆய்வின்போது அணையின் வலதுகரை , இடதுகரை, கவர்னர் வியூ பாயின்ட் நீர் அளவீட்டுமானி, உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள், அணையின் பராமரிப்பு ,நீர் மேலாண்மை , குறித்தும் நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் ஆய்வை முடித்து விட்டு அதிகாரிகள் அனைவரும் திருச்சி சென்றனர். கர்நாடக அரசு காவிரி குறுக்கே அணை கட்ட மும்முரமாக முயற்சி செய்து வரும் நிலையில் மேட்டூர் அணையில் நடைபெற்ற இந்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

விவசாயிகள் எதிர்ப்பு
தொடர்ந்து கல்லணையில் காவிரி மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்யவுள்ள நிலையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேகதாதுவில் அணை அமைப்பதற்காகவே மேலாண்மை குழு ஆய்வு செய்ய வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையிலான குழுவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications