சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயிரோடு விளையாட வேண்டாம்.. ஸ்டாலினுக்கு இனி பதில் சொல்ல மாட்டேன்.. முதல்வர் பழனிசாமி பொளேர்!

Google Oneindia Tamil News

சேலம்: எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் கேள்விகளுக்கும், அறிக்கைகளுக்கும் இனி பதில் சொல்ல மாட்டேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஒரே நாளில் 62 பேர் குணமடைந்தனர்... முதல்வர் சொன்ன தகவல்

    தமிழகத்தில் கொரோனா வேகம் எடுத்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முதல்நாள் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் எதிர்க்கட்சிகள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை செய்தது.

    தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்த நிலையில் , அவர் எதிர்கட்சிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் பழனிசாமி சரியாக செய்யவில்லை, அவருக்கு பக்குவம் போதவில்லை என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறார்.

    கொரோனா.. நேற்று 62 பேர் குணமடைந்தனர்.. சேலத்தில் 7 பேர் டிஸ்சார்ஜ்.. முதல்வர் பழனிசாமி ஹாப்பி நியூஸ்கொரோனா.. நேற்று 62 பேர் குணமடைந்தனர்.. சேலத்தில் 7 பேர் டிஸ்சார்ஜ்.. முதல்வர் பழனிசாமி ஹாப்பி நியூஸ்

    இனி கண்டுகொள்ள மாட்டேன்

    இனி கண்டுகொள்ள மாட்டேன்

    இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அதில், ஸ்டாலின் பேசுவதை நான் இனி கண்டுகொள்ள மாட்டேன். இனி எதிர்க்கட்சிகள் பேசுவது எதையும் நாங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம். அவருக்கு நான் இனி பதில் சொல்ல மாட்டேன். உயிரோடு விளையாட வேண்டாம். இது சரியில்லை. தினமும் அவர் அறிக்கை விடுகிறார். அரசை குற்றம் சொல்கிறார். அரசு தனியாக செயல்படவில்லை என்கிறார். ஆனால் மக்களோடு சேர்ந்து அனைத்து அதிகாரிகளும் செயல்படுகிறார்கள்.

    குற்றம் சொல்லும் நேரமா இது

    குற்றம் சொல்லும் நேரமா இது

    குற்றம் சொல்லும் நேரமா இது. நாங்கள் கஷ்டப்படுகிறோம், அதை விட்டுவிட்டு ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார். ஸ்டாலினிடம் ஆலோசனை கேட்க இதில் எதுவும் இல்லை. அவர் என்ன மருத்துவரா? மருத்துவ குழு சொல்லும் ஆலோசனையை கேட்டு நாங்கள் பணிகளை செய்து வருகிறோம். அதுதான் கொரோனாவை தடுக்கும். அரசியல் பிரச்சனை என்றால் அவரிடம் ஆலோசனை கேட்கலாம்.

    இது மருத்துவர்கள் தொடர்பான பிரச்சனை

    இது மருத்துவர்கள் தொடர்பான பிரச்சனை

    இது மருத்துவர்கள் தொடர்பான பிரச்சனை.இதனால் ஸ்டாலினிடம் ஆலோசனை கேட்க அவசியம் இல்லை. இதை அரசியலாக்கி, தன்னை முன்னிலைப்படுத்த முயல்கிறார். எங்களின் ஒரே நோக்கம் மக்களுக்கு பணி செய்வதுதான். இந்த நோயாளிகளை எப்படி குணப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்வது எங்கள் நோக்கம் இல்லை.

    ஸ்டாலின் இதை அரசியலாக்க நினைக்கிறார்

    ஸ்டாலின் இதை அரசியலாக்க நினைக்கிறார்

    ஸ்டாலின் இதை அரசியலாக்க நினைக்கிறார், அது நடக்காது. அவரின் ஆசை நிறைவேறாது. நாங்கள் எங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். எதிர்க்கட்சியை நாங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம். எங்களுக்கு மக்கள்தான் முக்கியம், மக்கள் கருத்துதான் முக்கியம். மக்களை எப்படி காப்பது, இந்த நோயை எப்படி விரட்டுவது என்பதுதான் எங்கள் நோக்கம். இந்த நேரத்தில் அரசியல் செய்வது தேவையா?.என்று முதல்வர் கேட்டுள்ளார்.

    English summary
    Coronavirus: I won't answer M K Stalin hereafter Tamilnadu says CM Palanisamy in Salem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X