பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்பை மீறி பேசுகிறார்.. கொந்தளித்த திருச்சி சிவா!
சேலம்: பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்பு மீறி பேசுவது ஏற்புடையது அல்ல என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
Recommended Video
அண்மைக் காலமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பேசி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. புதிய கல்விக் கொள்கை, சனாதனம், திராவிடம் என்று தமிழக ஆளுநர் பேசுவது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்படுவதாக பட்டமளிப்பு விழா அழைப்பதில் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், அதனை புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினர் என யாரையும் அழைக்கும் வழக்கம் கிடையாது. பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு வேந்தருக்கு முன் பேச வேண்டியது இணை வேந்தர்தான். பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களிடையே அரசியலை புகுத்துவதாக ஆளுநர் மீது சந்தேகம் உள்ளது. பட்டமளிப்பு விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை கவுரவ விருந்தினராக அழைப்பதன் நோக்கம் என்ன?
மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை. பாஜகவுக்கு பிரச்சாரம் செய்பவர் போல் ஆளுநர் இருக்கிறார். வரலாற்றை ஆளுநர் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். ஆளுநர் எந்த கொள்கையை பின்பற்றுபவராக இருந்தாலும் மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார். தமிழக அரசியலில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக இளைஞர் அணி சார்பில் 'திராவிட மாடல்' பயிற்சிப்பாசறை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்துகொண்டு பேசினார். அதில், இந்தியை எதிர்ப்பது நமது நோக்கம் அல்ல. இந்து மொழி திணிப்பை எதிர்ப்பது மட்டுமே நமது கொள்கை என்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருச்சி சிவா கூறுகையில், எங்களைப் போன்றோர் பட்டமளிப்பு விழாக்களுக்கு செல்லும் போது நெறி முறை, வழிமுறைகள் மாறாமல் பேசுவது வழக்கம். ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வரும் கருத்து விவாதத்திற்கு உரியதாக மாறி வருகிறது. எனவே அவர் வரம்பை மீறி பேசுவது ஏற்புடையதல்ல. தொடர்ந்து அவர் பேசி வருவது ஆளுநர் பதவிக்கு களங்கம் விளைவிக்கும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசப்படும். பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் கலந்து கொள்ளாதது அவரது உரிமை என்று தெரிவித்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications