சொந்த ஊரில் ‘3 நாட்கள் பிளான்’.. வெளியே தலைகாட்டல.. முக்கிய ‘தலை’களுடன் ரகசிய ஆலோசனையில் ஈபிஎஸ்?
சேலம் : சேலம் வந்துள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் தனது வீட்டிலேயே முக்கிய நிர்வாகிகள் சிலருடன் மட்டும் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வப்போது சொந்த ஊரான சேலத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமி, அங்கு நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்திப்பார். செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசுவார்.
ஆனால், தீபாவளிக்கு முன்னர் சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமி, லோக்கல் நிர்வாகிகளையும் பெரிதாகச் சந்திக்கவில்லை, செய்தியாளர்களைச் சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார்.
தொடர் அரசியல் நெருக்கடிகளில் சிக்கித் தவித்த எடப்பாடி பழனிசாமி, பரபரப்புகள் இன்றி ஓரிரு நாட்கள் ஓய்வெடுக்க விரும்புவதாக தகவல்கள் உலவி வருகின்றன.

தவிர்த்த ஈபிஎஸ்
எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் இருந்து சேலம் வந்தார். நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமியை முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டுமே சந்தித்துள்ளனர். தீபாவளியன்று சேலத்தில் இருந்தால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பது ஈபிஎஸ்ஸின் வழக்கம். எனினும் இந்த ஆண்டு அந்த சந்திப்புகளை ஈபிஎஸ் தவிர்த்துள்ளார்.

சட்டமன்றத்தில்
எடப்பாடி பழனிசாமி சேலம் செல்வதற்கு முன்னதாக, அவருக்கு எதிராக அடுத்தடுத்து சில சம்பவங்கள் அரங்கேறின. தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், ஈபிஎஸ் கோரிக்கைப்படி ஆர்பி உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்கப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றாமல், ஈபிஎஸ் இருக்கைக்கு அருகிலேயே அமர வைத்தார் சபாநாயகர். இதனைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

துப்பாக்கிச்சூடு அறிக்கை
அதேபோல, சட்டசபையில் 2 விசாரணை ஆணைய அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில், அப்போதைய அதிகாரிகள், அதிமுக அரசு, எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நோ மீட்டிங்
தொடர்ந்து, தனக்கு எதிராக சூளும் நிலவரங்களை கவனித்து வரும் எடப்பாடி பழனிசாமி, டெல்லி பாஜகவும் தனக்கு ஆதரவு அளிக்காமல் இழுத்தடித்து வருவதால் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார். இந்நிலையில், சேலம் வந்துள்ள எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்று நாட்களாக நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் முக்கியமான நிர்வாகிகளுடன் மட்டும் நேரிலும், போனிலும் ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மற்ற யாரையும் சந்திக்கவில்லை.

சிலுவம்பாளையம்
இந்நிலையில், நெடுஞ்சாலை நகரில் இருந்து சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டிற்குச் சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. வழக்கமாக சொந்த ஊருக்குச் சென்றால், லோக்கல் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்துப் பேசுவார் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். செய்தியாளர்களையும் சந்திப்பார். ஆனால், இந்த முறை சேலம் மாவட்டத்திற்கு வந்தது முதல் எந்தவொரு கட்சி நிகழ்ச்சிகளிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.

அதிமுகவினரிடையே குழப்பம்
தீபாவளி அன்று மருது சகோதரர்கள் நினைவு நாளை ஒட்டி அவர்களது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஈபிஎஸ். இந்த நிகழ்ச்சிக்கும் கட்சியினர் யாரையும் ஈபிஎஸ் அழைக்கவில்லை. செய்தியாளர்களைச் சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார் ஈபிஎஸ். எடப்பாடி பழனிசாமியின் வழக்கத்திற்கு மாறான இந்த நடவடிக்கைகள், சேலம் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினரிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

ரெஸ்ட்?
கடந்த சில மாதங்களாக தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனைகள், பயணங்கள் என அரசியல் பரபரப்புகளில் சிக்கி தவித்து வந்த எடப்பாடி பழனிசாமி, மனதளவில் மிகவும் சோர்ந்து போயிருக்கிறாராம். இதனால், சொந்த ஊரில் சில நாட்கள் எந்த பரபரப்பும் இன்றி ரெஸ்ட் எடுக்க திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் அதிமுக வட்டாரத்தில் உலா வருகிறது.

ரகசிய ஆலோசனை?
அதேசமயம், எடப்பாடி பழனிசாமி ஓய்வில் எல்லாம் இல்லை, சில முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார், இன்னும் 3 நாட்கள் சிலுவம்பாளையத்தில் தான் தங்கியிருப்பார். முக்கியமான நிர்வாகிகளுடன் தனது அடுத்தகட்ட திட்டங்கள் பற்றி ஆலோசித்து வருகிறார், அதற்காகவே வேறு கட்சி நிகழ்ச்சிகள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார்கள் எடப்பாடி வட்டாரத்தினர்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications