கொஞ்சம் அரட்டை-கொஞ்சம் டீ! சாலையோரக் கடையில் தேநீர் பருகிய எடப்பாடி பழனிசாமி! சட்டென குவிந்த மக்கள்!
சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, மாலை நேரத்தில் சாலையோர டீ கடைக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து தேநீர் பருகியுள்ளார்.
டீ ரொம்ப சூடாக இருந்ததால் அதனை தாமே ''சர் சர்'' என்று ஆற்றிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த தேநீர் கடை பெண் ஊழியர், நான் ஆற்றித்தருகிறேன் கொண்டாங்க எனக் கேட்க, இல்லம்மா பரவாயில்லை எனக் கூறி தனது டீயை தாமே ஆற்றி அருந்தினார்.

இதனிடையே பக்கத்தில் நின்ற தேநீர் கடை உரிமையாளரிடம் என்னென்ன டீ கொடுக்கிறீங்க என எடப்பாடி பழனிசாமி கேட்க, அதற்கு பதிலளித்த அவரோ, லெமன் டீ, ஜிஞ்சர் டீ, பிளாக் டீ, என லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தார். ஜாலியாக இப்படி பேசிக்கொண்டே எடப்பாடி பழனிசாமி டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த 5 நிமிடத்தில் மாறி மாறி அவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதில் அங்கிருந்தவர்கள் ஆர்வமாக இருந்தனர்.
அதனை எடப்பாடி பழனிசாமியின் பி.எஸ்.ஓ.க்கள் தடுக்கவில்லை. தேநீர் குடித்த பிறகு கார் ஏறச் சென்ற எடப்பாடி பழனிசாமியுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அங்கிருந்த் இளைஞர்கள் போட்டிபோட்டனர். அதனை கவனித்த அவர், வா வந்து நில்லு என உரிமையோடு அழைத்து தனது அருகில் நிறுத்தி அவர்களை புகைப்படம் எடுத்துக்கொள்ள வைத்தார்.

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை பொதுவாக தேர்தல் பிரச்சாரக் காலங்களில் தான் இது போன்ற திடீர் சர்ப்ரைஸ் கொடுப்பார். இன்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் இவ்வாறு திடீர் விசிட் அடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
இது திட்டமிட்ட விசிட்டா அல்லது எதேச்சையாக நடந்த நிகழ்வா எனத் தெரியவில்லை. ஆனால் இதன் மூலம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications