மாற்றம் உறுதி... இனி அரசியல் பயணம்... அதிமுக ஆட்சியை அமைத்து மக்களைக் காப்பேன் - சூளுரைத்த சசிகலா

வரப்போகின்ற லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே மாற்றத்தை நிச்சயம் பார்க்கலாம் என்று சசிகலா கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஆன்மீக பயணம் விரைவில் அரசியல் பயணமாக மாறும் என்று சசிகலா கூறியுள்ளார். வரப்போகின்ற லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே மாற்றத்தை நிச்சயம் பார்க்கலாம் என்று சசிகலா கூறியுள்ளார். உண்மைத் தொண்டர்களின் உதவியோடு அதிமுக ஆட்சியை அமைத்து மக்களைக் காப்பேன் என்றும் சேலத்தில் சசிகலா சூளுரைத்துள்ளார்.

Recommended Video

    மாற்றம் உறுதி... இனி அரசியல் பயணம்... அதிமுக ஆட்சியை அமைத்து மக்களைக் காப்பேன் - சூளுரைத்த சசிகலா

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2016ஆம் ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அதனை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். சசிகலாவின் இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தனர்.

    சசிகலா மனு தள்ளுபடி

    சசிகலா மனு தள்ளுபடி

    சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்சநீதிமன்றமும்,டெல்லி உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதன்படி, வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மனுக்களை ஏற்பதாகவும் சசிகலா மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி உத்தரவு பிறப்பித்தார். அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கிய தீர்மானம் செல்லும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதிமுகவின் கோட்டை

    அதிமுகவின் கோட்டை

    நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சசிகலா கூறியுள்ளார். இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, சங்ககிரியில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், 'அ.தி.மு.க தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை தான். அதனால் வழிவழியாக தொடர்ந்து வந்து கொண்டுள்ளது என்றார்.

    ஒற்றைத் தலைமை

    ஒற்றைத் தலைமை

    ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும். அனைத்தும் சரியாகும். அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் கருதுவதாகவும், அதிமுக நிர்வாகிகள் தம்மை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொண்டர்களை தாம் தொடர்ந்து சந்திப்பேன் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

    அரசியல் பயணம்

    அரசியல் பயணம்

    மிக விரைவில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். வரப்போகின்ற லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே மாற்றத்தை நிச்சயம் பார்க்கலாம். ஆன்மீக பயணம் அரசியல் பயணமாக மாறுமா என்ற கேள்விக்கு ஆம் இனிமேல் அதை தான் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

    மக்களைக் காப்பேன்

    மக்களைக் காப்பேன்

    எ.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்களின் பாசறையில் வளர்ந்த நான், உண்மை தொண்டர்களின் துணையோடு, மீண்டும் கழக ஆட்சியினை அமைத்து தமிழக மக்களை காத்திடுவேன். இது உறுதி' என்று கூறியுள்ளார். முன்னதாக நாமக்கல்லில் பேசிய சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது. கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கவோ நீக்கவோ முடியும் என்று கூறினார். 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும். ஜெயலலிதாவின் வாக்கை நிறைவேற்றுவதே என் கடமை. எனது 33 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவும் கடந்து போகும் என்றும் கூறியிருந்தார் சசிகலா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+