ஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம்.. சேலம் கடையில் அலைமோதிய மக்கள்
சேலம்: சேலம் கோட்டையில் உள்ள ஒரு கடையில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை தாறுமாறாக விற்கிறது. தமிழகத்தில் மொத்த விலைக்கே வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு குறையாமல் விற்கிறது. சில்லறையில் 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கிறது. சின்ன வெங்காயம் 150க்கு குறையவே இல்லை.
எகிப்தில் இருந்து வருகிறது, துருக்கியில் இருந்து வருகிறது. துபாயில் இருந்து வருகிறது என்று மக்கள் வெங்காயத்தை எதிர்பார்த்தனர்.

வாங்க ஆளில்லை
இதில் எகிப்தில் இருந்து மட்டும் வெங்காயம் வந்துள்ளது. வந்த வெங்காயத்தை மக்கள் சீண்டவில்லை. இதனால் விலை தொடர்ந்து உச்சாணி கொம்பிலேயே இருக்கிறது. பொங்கல் வரும் போது தான் குறையும் என்கிறார்கள். அதுவரை குறைய வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

நூதன வியாபாரம்
இதனிடையே வெங்காய விலையேற்றத்தை செல்போன், ஹெல்மெட் உள்பிட்ட பல்வேறு பொருட்களை வாங்கினால் இலவசமாக வெங்காயம் வழங்கப்படும் என்று கடைக்காரர்கள் சலுகை அறிவித்து தங்கள் வியாபாரத்தையும் கடைக்கான விளம்பரத்தையும் அதிகரித்து வருகிறார்கள்.

வெங்காயம் இலவசம்
அப்படித்தான் சேலத்தின் கோட்டையில் உள்ள ஒரு கடையில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று அந்த கடைக்காரர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நூதன விளம்பரம்
இதனால் தகவல் அறிந்து ஏராளமானோர் அவரது கடைக்கு வந்து வெங்காயத்தையும் ஹெல்மெட்டையும் வாங்கி சென்றனர். இதுபற்றி கடைக்காரர் கூறுகையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக இப்படி நூதன விளம்பரம் செய்ததாக தெரிவித்தார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications