இளையராஜாவுடன் சண்டை.. ஆவேசமாக வந்த திவ்யா.. 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி.. கொடுமை!

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாயிடம் விசாரணை நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஆவேசமாக கிணற்றடிக்கு வந்த திவ்யா, தன்னுடைய 2 குழந்தைகளையும் தூக்கி கிணற்றுக்குள் வீசினார்.. உடனே அவரும் கிணற்றில் குதித்து விட்டார்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தம்மம்பட்டி செங்காடு... இங்கு வசித்து வருபவர் இளையராஜா...இவரது மனைவி திவ்யா.. 30 வயதாகிறது.. இவர்களுக்கு வர்னிஷா தன்ஷிகா என்ற 3 மற்றும் ஒரு வயது குழந்தைகள் உள்ளனர்.

தம்பதி 2 பேருக்குமே தினமும் சண்டை வருமாம்.. கல்யாணம் ஆனது முதலே இருவருக்கும் ஒத்து வரவில்லை.. இவர்கள் போடும் சண்டை அக்கம் பக்க வீட்டினருக்கு தெரிந்த வழக்கமான சமாச்சாரம்தான்.

இளையராஜா

இளையராஜா

இப்போதும் மறுபடியும் அதே போல தகராறு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மேல் இளையராஜாவுடன் குடும்பம் நடத்த முடியாது என்று முடிவெடுத்த திவ்யா, 2 குழந்தையும் அழைத்து கொண்டு வீட்டு பக்கத்தில் இருக்கும் கிணற்றடிக்கு சென்றார். 2 குழந்தைகளையும் அடுத்தடுத்து தூக்கி கிணற்றில் வீசினார்.. பின்னர் அதே ஆவேசத்துடன் திவ்யாவும் கிணற்றில் குதித்தார்.

மயங்கின

மயங்கின

அப்போது கிணற்றுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. 3 பேருமே கிணற்றில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்து கதறினர்.. பிறகு 3 பேரையும் சிரமப்பட்டு மேலே கொண்டு வந்தனர். 2 குழந்தைகளுமே மயங்கிய நிலையில் கிடந்தன.. அதனால் 3 பேரையும் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர்.

போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

அங்கு குழந்தைகளை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே 2 குழந்தைகளும் இறந்து விட்டதாக சொன்னார். கிணற்றுக்குள் குதித்தபோது, அதில் இருந்த பாறையில் இடித்து திவ்யாவுக்கு காயம் ஏற்பட்டது.. அதனால் அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.

விசாரணை

விசாரணை

தம்பதி இருவரிடமும் இப்போது விசாரணை நடக்கிறது. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்குள் நடந்த சண்டையில் அநியாயமாக 2 குழந்தைளையும் கொன்றது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+