• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நல்ல கொழுப்பு கறியா போடுடா.. 75 வயது கடைக்காரரிடம் போலீஸார் அடாவடி.. மன்னிப்பு கேட்க வைத்த கமிஷனர்

|
  2 கிலோ மட்டனுக்காக குடும்பத்தை அவமானப்படுத்திய போலீஸார்-வீடியோ

  சேலம்: "2 கிலோ கறி போடுடா" என்று வயதான மட்டன்கடைக்காரரை போலீஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம்தான் விவகாரமாக வெடித்து கிளம்பியது.

  சேலம் கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூக்குத்திக்கவுண்டர். 75 வயதாகிறது. இவர், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே மட்டன் கடை வைத்திருக்கிறார்.

  அன்னதானப்பட்டி ஸ்டேஷனில் வேலை பார்க்கும் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் ஆகிய 2 பேரும் இந்த கடையில்தான் எப்பவுமே ஓசியில் மட்டன் வாங்கி போவதுதான் வழக்கம். ஒருநாளும் இவர்கள் வாங்கிய கறிக்கு காசு தந்ததே கிடையாது.

  மட்டன் போடுடா

  மட்டன் போடுடா

  இந்நிலையில் நேற்று கறி கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தநேரம் பார்த்து ரெண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட 3 பேரும் ஜீப்பில் வந்து கடைக்கு வந்தனர். அப்போது, ஜீப்பில் உட்கார்ந்துகொண்டே, "2 கிலோ கொழுப்பா மட்டன் போடுடா" என்று சத்தமாக கேட்டனர். என கறிக்கடைக்காரரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள், அதிகாரமாக கேட்டதாக கூறப்படுகிறது.

  கெட்ட வார்த்தைகள்

  கெட்ட வார்த்தைகள்

  அதற்கு மூக்குத்தி கவுண்டர், "நான் உங்களை விட வயசில் பெரியவன். கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள்" என்றார். இதைக் கேட்டதும் கோபமடைந்த 3 போலீஸ்காரர்களும், ஜீப்பை விட்டு கீழே இறங்கி வந்து, மூக்குத்திக்கவுண்டர், அவருக்கு உதவியாக கடையில் நின்றிருந்த அவருடைய மனைவி ராமாயியை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி இருக்கிறார்கள்.

  ஏன் அடிச்சீங்க?

  ஏன் அடிச்சீங்க?

  பிறகு மூக்குத்தி கவுண்டரை ஆத்திரம் தீராமல், அடித்து உதைத்து ஜீப்பில் ஏற்றி வலுக்கட்டாயமாக போலீஸ் ஸ்டேஷனுக்கும் கொண்டு சென்றதாக தெரிகிறது. விஷயம் கேள்விப்பட்ட மூக்குத்தி கவுண்டர் மகன் விஜயகுமார் ஸ்டேஷன் சென்று, "எதுக்காக என் அப்பாவை அடிச்சீங்க?" என்று கேட்டார். இதை கேட்ட அங்கிருந்த போலீஸ்காரர் விஜயகுமாரையும் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.

  ரத்த காயங்கள்

  ரத்த காயங்கள்

  கடைசியாக ஒரு வெள்ளை பேப்பரில் தந்தை-மகன் இருவரிடமும் போலீசார் கைரேகை வாங்கி கொண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். போலீசார் அடித்த அடியில் உடம்பெல்லாம் ரத்த காயமடைந்த தந்தையும், மகனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் பறந்தது. இதையடுத்து, கமி‌ஷனர் சங்கரே இது சம்பந்தமாக விசாரணை நடத்த போவதாக கூறப்பட்டது.

  மன்னிப்பு கேட்டனர்

  மன்னிப்பு கேட்டனர்

  இது தெரிந்ததும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உடனடியாக கறிக்கடைக்கு ஓடினார்கள். அங்கு ராமாயி மட்டும்தான் இருந்தார். அவரிடம் ஒவ்வொருவராக மன்னிப்பு கேட்டார்கள். கறிக்கடையில் போலீஸ்காரர்கள் ராமாயியிடம் மன்னிப்பு கேட்ட காட்சி வாட்ஸ்அப்பிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

  கமிஷனர் சங்கர்

  கமிஷனர் சங்கர்

  ஆனாலும், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் இருவரையும் சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி கமி‌ஷனர் சங்கர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  சேலம் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  வருடம்
  வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
  2014
  பன்னீர்செல்வம் வி அஇஅதிமுக வென்றவர் 5,56,546 49% 2,67,610
  உமாராணி எஸ் திமுக தோற்றவர் 2,88,936 26% 0
  2009
  செம்மலை எஸ் அஇஅதிமுக வென்றவர் 3,80,460 42% 46,491
  தங்கபாலு கெ.வி காங்கிரஸ் தோற்றவர் 3,33,969 37% 0
  2004
  தங்கபாலு கெ. வி. காங்கிரஸ் வென்றவர் 4,44,591 60% 1,75,627
  ராஜசேகரன். எ அஇஅதிமுக தோற்றவர் 2,68,964 36% 0
  1999
  செல்வகணபதி, டி.எம். அஇஅதிமுக வென்றவர் 3,63,689 50% 25,411
  ராமமூர்த்தி, கெ. டி ஆர் சி தோற்றவர் 3,38,278 46% 0
  1998
  ராமமூர்த்தி கெ. ஐஎண்டி வென்றவர் 3,65,557 55% 1,35,880
  தேவதாஸ் ஆர். டி எம் சி ( எம்) தோற்றவர் 2,29,677 35% 0
  1996
  தேவதாஸ் .ஆர் டி எம் சி ( எம்) வென்றவர் 3,15,277 47% 1,20,885
  தங்கபாலு கெ.வி. காங்கிரஸ் தோற்றவர் 1,94,392 29% 0
  1991
  ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரஸ் வென்றவர் 4,06,042 67% 2,82,568
  அர்த்தநாரிசாமி கெ.பி. திமுக தோற்றவர் 1,23,474 20% 0
  1989
  ரங்கராஜன் குமார்மங்கலம் காங்கிரஸ் வென்றவர் 4,00,936 61% 2,41,770
  கார்த்திகேயன் எம் திமுக தோற்றவர் 1,59,166 24% 0
  1984
  ரங்கராஜன் குமார் மங்களம் காங்கிரஸ் வென்றவர் 3,59,819 69% 2,36,175
  கந்தசாமி எம்.எ. ஜேஎன்பி தோற்றவர் 1,23,644 24% 0
  1980
  பழனியப்பன் சி. திமுக வென்றவர் 2,33,971 51% 26,258
  கம்னன் பி. அஇஅதிமுக தோற்றவர் 2,07,713 45% 0
  1977
  கண்ணன் பி. அஇஅதிமுக வென்றவர் 2,54,138 59% 79,604
  ராஜராம் கெ. திமுக தோற்றவர் 1,74,534 40% 0
  1971
  இ. கிருஷ்ணன் திமுக வென்றவர் 2,30,736 56% 54,796
  எம். பி. சுப்பிரமணியம் என்சிஓ தோற்றவர் 1,75,940 43% 0

   
   
   
  English summary
  Police officers attacked father and son for Free Mutton. Officers' excuse video goes viral now.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more