இன்று முதல் சேலம் மக்களுக்கு நல்ல செய்தி.. பெங்களூரு-கொச்சி- சென்னை விமான சேவை எப்படி இருக்கும்?
சேலம் : இரண்டு வருடங்களுக்கு பிறகு சேலத்தில் இருந்து பெங்களூரு-கொச்சிக்கு இன்று முதல் விமான சேவை தொடங்குகிறது. வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமை தவிர மற்ற 5 நாட்களிலும் இந்த விமான சேவை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை,மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடியை தவிர சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள் சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றன. மேற்கு மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிலையில் கோவைக்கு அடுத்தபடியாக சேலத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்படியே சேலம் காமலாபுரம் விமான நிலையம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து உதான் திட்டத்தின் கீழ் சென்னை- சேலம் இடையே கடந்த 2018 மார்ச் மாதம் முதல் விமானம் இயக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாகவே பெரும்பாலான நேரத்தில் இந்த ரூட்டில் விமானம் 85% வரை நிரம்பி வந்தது கொரோனா காலத்தில் சேலத்தில் விமான சேலை நிறுத்தப்பட்டது.இதனிடையே உதான் திட்டமும் முடிவுக்கு வந்தது. இதனால் சேலத்தில் விமானச் சேவையே இல்லாத நிலை உருவானது.
சேலத்தில் விமானங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மீண்டும் விமானங்களை இயக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், ஐதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கு விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்தன. இதற்கான முன்பதிவுகளும் இரண்டு வாரங்களாக நடந்து வந்தது.
இதனிடையே இன்று முதல் சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சின் மற்றும் ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதனால் சேலம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதற்கட்டமாக பெங்களூரு - சேலம் -கொச்சி வழித்தடத்திலும், அதேபோல், கொச்சி - சேலம் -பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமை தவிர மற்ற 5 நாட்களிலும் இந்த விமான சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் 29-ந் தேதி முதல் பெங்களூரு - சேலம் - ஐதராபாத் வழித்தடத்திலும், மறுமார்க்கமாக மீண்டும் ஐதராபாத் - சேலம் - பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்க முடிவு செய்துள்ளதாம். திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்தின் 4 நாட்களுக்கு இண்டிகோ விமான சேவை இருக்குமாம். அதேநேரத்தில் வருகிற 29-ந் தேதி முதல் தினமும் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து கொச்சி செல்லும் விமானம் இன்று மதியம் 1.40 மணிக்கு சேலம் வருகிறது. அந்த விமானத்துக்கு காமலாபுரம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. மற்றும் விமான நிலைய அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
தற்போது பெங்களூரில் இருந்து 12.40 மணிக்கு இந்த விமானம் புறப்படும். மதியம் 1.40 மணிக்குச் சேலம் விமான நிலையத்திற்கு வரும். இங்கிருந்து மதியம் 2.05 மணிக்கு விமானம் புறப்பட்டு 3.15 மணிக்குக் கொச்சிக்குச் சென்றடையும். மறுமார்க்கமாக கொச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 4.50 மணிக்குச் சேலம் விமான நிலையத்திற்கு வரும். இங்கிருந்து மீண்டும் மாலை 5.15 மணிக்கு விமானம் புறப்பட்டு மாலை 6.15 மணிக்குப் பெங்களூரு சென்றடையும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications