குடுங்க ஹெல்மெட்ட.. உங்காருங்க வண்டியில! டவாலியுடன் ஸ்கூட்டரில் பறந்த சேலம் கலெக்டர்! காரணம் என்ன?
சேலம் : சேலம் மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், தொடர்ந்து கார் மலைப்பாதையில் செல்லாததால் இருசக்கர வாகனத்தில் டவாலியுடன் சென்று மலையில் உள்ள பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வழக்கத்திற்கு முன்னதாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தெற்கு வடக்கு என பாகுபாடில்லாமல் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.
மேலும் இன்னும் 3 நாளைக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சேலம் மழை
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் கனமழை காரணமாக மலைச் சாலையில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சேலம் ஏற்காடு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது

சாலை துண்டிப்பு
ஏற்காடு மலை அடிவார பகுதியில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலம் அருகே பெரும் அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் அடித்து வரப்பட்ட பாறைகளை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அகற்றி வருகின்றனர்.

ஆட்சியர் ஆய்வு
அடுத்த மூன்று நாட்களுக்கு மேலாக சாலை சீரமைக்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வழக்கமாக ஆய்வு பணிகளுக்கு காரில் செல்வது தான் வழக்கம்.

ஸ்கூட்டரில் சென்றார்
ஆனால் தற்போது ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் காரை எதிர்பார்க்காமல் ஸ்கூட்டரிலேயே சென்றார். ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் டவாலியுடன் சென்று மலையில் உள்ள பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு பலரும் ஆட்சியரை வாழ்த்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications