கல்வாராயன் மலையின் கனவு சார்.. ஜேஇஇ தேர்வில் வென்ற பழங்குடி மாணவி..எங்கு படிக்க போறார் தெரியுமா?
சேலம்: சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுகன்யா, ஜேஇஇ (JEE) நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்றார். அவர் தற்போது எங்கு படிக்க போகிறார் என்பது தெரியுமா? மலைவாழ் மக்களின் பல நாள் கனவு நிறைவேறியுள்ளது.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த வேளம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சுகன்யா. மூன்று வயதில் தனது தாயை இழந்த சுகன்யா, லட்சுமணன் - சின்னபொண்ணு ஆகியோரை பெற்றோராய் ஏற்று அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். கரியகோயில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்தார்.

இந்நிலையில், மத்திய அரசு நடத்திய பொறியியல் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வில், முதன்மை மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டு படிநிலைகளிலும் வெற்றி பெற்றார். இதன் மூலம், மாணவி சுகன்யா திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (National Institute of Technology) பொறியியல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
இந்த வெற்றி குறித்து மாணவி சுகன்யா கூறும் போது, "என்னுடைய பெற்றோர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் எனக்கு நல்ல வழிகாட்டுதல்களை வழங்கினர். சாதிச்சான்று கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த எனக்கு, எங்களுடைய பள்ளி ஆசிரியர்கள் உதவியால் சாதிச் சான்றிதழ் கிடைத்தது. வெற்றி ஒன்றே குறிக்கோள் என்ற இலக்குடன் இரவு பகல் பாராமல் படித்தேன்.
அதனால், இந்த தேர்வில் வெற்றி பெற்றேன்.
எந்த தோல்வியும் நிரந்தரமானது கிடையாது. மாணவர்கள் தைரியமாக தேர்வுகளை எதிர்கொண்டு எழுதி வெற்றி பெற வேண்டும். எனக்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்திப் பொறியியல் (Production Engineering) படிக்க போகிறேன்" இவ்வாறு மாணவி சுகன்யா கூறினார்.
இதனிடையே இதேபோல் திருச்சி பச்சமலை கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவி ரோஹிணியும் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலை கிராமத்தில், தொலை தொடர்பு, இணையதள சேவை, மின்சாரம் உள்ளிட்ட எல்லா வசதிகளுமே மிக குறைவு. மலைப்பகுதியான பச்சமலையில் வாழும் மலைவாழ் மாணவி ரோஹிணி. பச்சமலை அடுத்த சின்ன இலுப்பூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார். பொதுத்தேர்வில் 423 மதிப்பெண்கள் பெற்று வென்ற அவர், நடந்த முடிந்த ஜேஇஇ தேர்வில் 73.8 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இந்த நிலையில், மாணவி ரோகினிக்கு திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (National Institute of Technology) வேதிப்பொறியியல் படிக்க போகிறார். படித்தால் எந்த உயரத்தையும் அடையலாம் என்பதற்கு இந்த மாணவிகள் சிறந்த உதாரணம் ஆவார்கள்.

-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications